IPL 2023: ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் மோசமான சாதனை..! ஐபிஎல் வரலாற்றில் டாப் 3 குறைவான ஸ்கோர்கள்

By karthikeyan V  |  First Published May 14, 2023, 9:11 PM IST

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் வெறும் 59 ரன்களுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆல் அவுட்டான நிலையில், இதுதான் ஐபிஎல்லின் 3வது குறைவான ஸ்கோர் ஆகும். ஐபிஎல் அணிகளின் டாப் 3 குறைவான ஸ்கோர்களை பார்ப்போம்.
 


ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், இந்த சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. ஒவ்வொரு போட்டியும் புள்ளி பட்டியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்படியான முக்கியமான கட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஆர்சிபியிடம் படுதோல்வி அடைந்தது.

16 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் முதலிடத்திலும், 15 புள்ளிகளுடன் சிஎஸ்கே 2ம் இடத்திலும், 14 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் 3ம் இடத்திலும், 13 புள்ளிகளுடன் லக்னோ அணி 4ம் இடத்திலும் உள்ளன.

Latest Videos

12 போட்டிகளில் ஆடி 6 வெற்றிகளை பெற்றிருந்த ராஜஸ்தான் ராயல்ஸும், 11 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றிருந்த ஆர்சிபி அணியும் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இன்றைய போட்டியில் மோதின.

IPL 2023: ராஜஸ்தானை வெறும் 59 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து ஆர்சிபி அபார வெற்றி

ஜெய்ப்பூரில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி, ஃபாஃப் டுப்ளெசிஸ்(55), மேக்ஸ்வெல்லின்(54) அரைசதங்கள் மற்றும் அனுஜ் ராவத்தின் (11 பந்தில் 29 ரன்கள்) அதிரடியான ஃபினிஷிங்கால் 20 ஓவரில் 171 ரன்களை குவித்தது. 172 ரன்கல் என்ற சவாலான இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி 10.3 ஓவரில் வெறும் 59 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 112 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

ராஜஸ்தான் அணி வெறும் 59 ரன்களுக்கு ஆல் அவுட்டானநிலையில், இதுவே ஐபிஎல்லில் ஒரு அணி அடித்த 3வது குறைவான ஸ்கோர் ஆகும். ஐபிஎல்லில் டாப் 3 குறைவான ஸ்கோர்களை பார்ப்போம்.

1. ஆர்சிபி 49 ரன்கள் vs கேகேஆர் - 2017
2. ராஜஸ்தான் ராயல்ஸ் 58 ரன்கள் vs ஆர்சிபி - 2009
3. ராஜஸ்தான் ராயல்ஸ் 59 ரன்கள் vs ஆர்சிபி - 2023

இந்தியாவின் எதிர்ப்புக்கு அடிபணிந்த பாகிஸ்தான்! வேறு நாட்டுக்கு மாற்றப்படும் ஆசிய கோப்பை? எந்த நாடு தெரியுமா.?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏற்கனவே 2009ம் ஆண்டு ஆர்சிபிக்கு எதிராக 58 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியிருக்கிறது. மீண்டும் அதே அணிக்கு எதிராக 59 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, டாப் 3 குறைவான ஸ்கோர்களை அடித்த அணிகள் பட்டியலில் 2 இடங்களை ராஜஸ்தான் அணி பிடித்துள்ளது.
 

click me!