பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி வசமா சிக்கியதால் ஆஸி., டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார் Tim Paine

By karthikeyan VFirst Published Nov 19, 2021, 2:52 PM IST
Highlights

பெண் பணியாளர் ஒருவருக்கு ஆபாச மெசேஜ்கள் அனுப்பிய விவகாரம் அம்பலமானதையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகினார் டிம் பெய்ன்.
 

2018ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தடை பெற, அதன்விளைவாக அதுமுதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன்சியை ஏற்றார் டிம் பெய்ன்.

அந்த தொடர் முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்திவந்த டிம் பெய்ன், அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக தொடங்கவுள்ள ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், 2017 பிரிஸ்பேன் டெஸ்ட்டின்போது பெண் பணியாளர் ஒருவரை பாலியலுக்கு அழைத்து, டிம் பெய்ன் ஆபாச மெசேஜ்கள், அவரது நிர்வாணப்புகைப்படம் ஆகியவற்றை அனுப்பியது அம்பலமானது. 

இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருப்பதற்கான தகுதியை இழந்துவிட்டதாக கூறி ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகியுள்ளார் டிம் பெய்ன்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிம் பெய்ன், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுகிறேன். நான், என் குடும்பம், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் இதுதான் சரியான முடிவு. 4 ஆண்டுகளுக்கு முன் பெண் பணியாளர் ஒருவருக்கு அனுப்பிய மெசேஜ் தொடர்பாக எனது கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்.

எனது செயலுக்காக இன்றும் நான் வருந்துகிறேன். என் மோசமான செயலையும் என் மனைவி மற்றும் குடும்பத்தினர் மன்னித்தது கடவுளின் கருணை. 2017ல் நடந்த அந்த மோசமான சம்பவத்தின் விளைவாக, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் என்ற தகுதியை நான் இழக்கிறேன். என்னால் விளையாட்டுத்துறைக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு மன்னிப்பு கோருகிறேன்.  கேப்டன்சியிலிருந்து விலகினாலும், ஆஸ்திரேலிய அணியில் ஒரு வீரராக தொடர விரும்புகிறேன். ஆஷஸ் தொடரையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
 

click me!