CSK Online Tickets: 26ஆம் தேதி சென்னையில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்!

By Rsiva kumar  |  First Published Mar 23, 2024, 9:35 AM IST

வரும் 26 ஆம் தேதி சிஎஸ்கே மற்றும் ஜிடி அணிகள் மோதும் டிக்கெட் விற்பனை இன்னும் சற்று நேரத்தில் ஆன்லைனில் தொடங்குகிறது.


நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் நேற்று பிரம்மாண்ட தொடங்கியது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. பின்னர் 174 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சிஎஸ்கே அணி பேட்டிங் செய்தது. இதில், ரச்சின் ரவீந்திரா, அஜின்க்யா ரஹானே, ஷிவம் துபே, டேரில் மிட்செல் ஆகியோரது அதிரடியால் சிஎஸ்கே 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலமாக சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக அவதாரம் எடுத்த ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் தோற்ற போதிலும் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். மேலும், கடந்த 16 ஆண்டுகள் சாதனையை தக்க வைத்துக் கொண்டுள்ளார். கடைசியாக கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் ஆர்பிசி வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Latest Videos

கடைசியாக சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை தோற்கடித்து கிட்டத்தட்ட 5784 நாட்கள் முடிந்துவிட்டது. மேலும், இதுவரையில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய 32 போட்டிகளில் சிஎஸ்கே 21 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆர்சிபி 10 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் தான் இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 26ஆம் தேதிக்கான டிக்கெட் விற்பனை இன்னும் சற்று நேரத்தில் ஆன்லைனில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடங்குகிறது. இதனை பேடிஎம் மற்றும் இன்சைடெர் ஸ்போர்ட் இணையத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திலும் சென்று புக் செய்து கொள்ளலாம்.

click me!