IPL 2023: CSK vs SRH சென்னை போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடக்கம்!

By Rsiva kumar  |  First Published Apr 17, 2023, 9:34 AM IST

சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி வரும் 21 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.


ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறது. இதுவரையில் 5க்கு 4 போட்டிகளில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. 4 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றியும், 2ல் தோல்வியும் கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று 2ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது. டெல்லி 5லும் தோற்று கடைசி இடத்தில் உள்ளது.

IPL 2023: யார் இந்த விஜயகுமார் வைஷாக்? ஆர்சிபியின் வெற்றிக்கு வித்திட்ட மீடியம் ஃபாஸ்ட் பவுலர்!

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் வரும் 21 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையிலான 29ஆவது போட்டி நடக்கிறது. சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கவுண்டரில் தொடங்குகிறது. 

IPL 2023: 14 வருடங்களுக்கு முன்பு அப்பா என்ன செய்தாரோ, அதையே செய்த அர்ஜூன் டெண்டுல்கர்!

சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் ரூ.1,500-க்கான (சி, டி, இ கீழ்தளம்) டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. ரூ.2,000, ரூ.2,500 ஆகிய விலைக்கான டிக்கெட்டுகள் கவுண்ட்டரிலும், PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணையதளங்களிலும் ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.

IPL 2023: சின்னபுள்ள தனமா சறுக்கு விளையாட்டு விளையாடும் விராட் கோலி: வைரலாகும் புகைப்படம்!

click me!