ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது.
அயர்லாந்து டி20 தொடரைத் தொடர்ந்து இந்தியா ஆசியக் கோப்பை 2023 தொடரில் விளையாடுகிறது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இணைந்து இந்த தொடரை நடத்துகின்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாள், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 6 அணிகள் இந்த தொடரில் விளையாடுகின்றன. வரும் 30 ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை 2023 தொடர் செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் நடக்கிறது.
செலக்ஷன் கமிட்டி மீட்டிங்கில் கலந்து கொள்ளும் ரோகித் சர்மா: ஆசிய கோப்பைக்கு யார் யாருக்கு வாய்ப்பு?
இதற்கான இந்திய அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் ஆசிய கோப்பை 2023 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டில் மோதின. கடைசியாக ஆசிய கோப்பை டி20 போட்டியில் மோதின. இதில், 2 போட்டிகளில் விளையாடி இரு அணிகளும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றன.
இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு தொடர்கள் எதுவும் நடக்காத நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் அடிக்கடி நடுநிலை மைதானங்களிலும் இலங்கையிலும் நேருக்கு நேர் மோதுகின்றன. கடந்த 1997 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் பாகிஸ்தான் 9 ஓவருக்கு 5 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்ட நிலையில் போட்டி கைவிடப்பட்டது.
ஃபர்ஸ்ட் போட்டியில் வெற்றி; 2ஆவது போட்டிக்கு தயாராகும் டீம் இந்தியா!
இதையடுத்து கடந்த 2004 ஆம் ஆண்டு இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த மோதலில் இந்த முறை, பாகிஸ்தான் அணி இந்தியாவை 59 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றது. 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் இந்தியா கடைசி ஓவரில் 268 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் இலங்கையில் நடந்த 3 போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஆசியக் கோப்பைக்கான தேர்வுக்குழு கமிட்டி மீட்டிங் நாளை நடக்க உள்ளது. இதில் ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதையடுத்து, ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது.