டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 2ல் மிகச்சிறப்பாக ஆடிவரும் மற்றும் சமபலம் வாய்ந்த அணிகளான இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று மோதுகின்றன.
பெர்த்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரு எதிர்பார்த்திராத அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
undefined
நெதர்லாந்தை வீழ்த்தி டி20 உலக கோப்பையில் ஒருவழியா முதல் வெற்றியை பெற்ற பாகிஸ்தான்
இடது கை ஸ்பின்னர் அக்ஸர் படேல் நீக்கப்பட்டு, கூடுதல் பேட்ஸ்மேனாக, ஆஃப் ஸ்பின்னும் வீசக்கூடிய தீபக் ஹூடா சேர்க்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க அணியில் அதிகமான இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கும் நிலையில், ஆஃப் ஸ்பின் வீசக்கூடிய அதிரடி பேட்ஸ்மேனான தீபக் ஹூடா அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவரது சேர்ப்பு இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்தும்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
தென்னாப்பிரிக்க அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரிஸ்ட் ஸ்பின்னர் ஷம்ஸி நீக்கப்பட்டு கூடுதல் ஃபாஸ்ட் பவுலராக லுங்கி இங்கிடி சேர்க்கப்பட்டுள்ளார்.
கடைசி பந்தில் வங்கதேச விக்கெட் கீப்பர் செய்த தவறால் நோ-பால் கொடுத்த அம்பயர்..!
தென்னாப்பிரிக்க அணி:
குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரைலீ ரூசோ, எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வைன் பார்னெல், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, அன்ரிக் நோர்க்யா.