கடைசி பந்தில் வங்கதேச விக்கெட் கீப்பர் செய்த தவறால் நோ-பால் கொடுத்த அம்பயர்..!

By karthikeyan V  |  First Published Oct 30, 2022, 3:27 PM IST

வங்கதேசம் - ஜிம்பாப்வே இடையேயான பரபரப்பான போட்டியின் கடைசி பந்தில் வங்கதேச விக்கெட் கீப்பர் நூருல் ஹசன் செய்த தவறால் பரபரப்பான கட்டத்தில் நோ பால் கொடுக்கப்பட்டது. அந்த வீடியோ வைரலாகிவருகிறது.
 


டி20 உலக கோப்பையில் க்ரூப் 2ல் இடம்பெற்றுள்ள ஜிம்பாப்வே அணி அபாரமாக விளையாடிவருகிறது. தகுதிச்சுற்றில் சிறப்பாக விளையாடி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்ற ஜிம்பாப்வே அணி, இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றிருந்த க்ரூப் 2ல் இடம்பெற்றது.

ஜிம்பாப்வே - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியில் தென்னாப்பிரிக்கா ஜெயித்திருக்க வேண்டியது. ஆனால் ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டதால் இரு அணிகளுக்கும் புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. அடுத்த போட்டியில் பாகிஸ்தானை கடைசி பந்தில் வீழ்த்தி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே அணி. வெறும் 131 ரன்கள் என்ற எளிய இலக்கை பாகிஸ்தானை விரட்டவிடாமல் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது அனைவரையும் கவர்ந்தது.

Tap to resize

Latest Videos

undefined

டி20 உலக கோப்பையில் வரலாற்று சாதனை படைத்த க்ளென் ஃபிலிப்ஸ்..!

அடுத்ததாக ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தை இன்று எதிர்கொண்டது. வங்கதேசம் - ஜிம்பாப்வே இடையேயான போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 20 ஓவரில் 150 ரன்கள் அடித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஷாண்டோ அருமையாக ஆடி 71 ரன்கள் அடித்தார்.

151 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 147 ரன்கள் அடித்து 3 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த இலக்கை சிறப்பாக விரட்டிய ஜிம்பாப்வே அணி, கடைசி வரை கடுமையாக போராடி வெறும் 3 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியின் கடைசி ஓவரை மொசாடெக் ஹுசைன் வீசினார். கடைசி பந்தை ஜிம்பாப்வேவின் டெய்லெண்டர் முசாரபாணி எதிர்கொண்டார். கடைசி பந்தில் 5 ரன் தேவைப்பட்டது. மொசாடெக் ஹுசைன் வீசிய அந்த பந்தை ஸ்டம்ப்புக்கு அருகில் நின்ற விக்கெட் கீப்பர் நூருல் ஹசன் பிடித்து ஸ்டம்பிங் செய்தார். ஆனால் அம்பயர் நோ-பால் கொடுத்தார். அதனால் ஆட்டம் மேலும் பரபரப்பானது. கடைசி பந்தில் ஜிம்பாப்வேவுக்கு பவுண்டரி தேவைப்பட முசாரபாணி ரன்னே அடிக்கவில்லை. அதனால் வங்கதேசம் ஜெயித்தது.

ஹர்திக் பாண்டியா மாதிரியான பிளேயரை உட்கார வச்சுட்டு ஆடியதால் தான் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றது - கவாஸ்கர்

அந்த கடைசி பந்தில் நூருல் ஹசன் செய்த ஸ்டம்பிங்கிற்கு அம்பயர் நோ பால் கொடுத்தார். ஐசிசி விதிப்படி, விக்கெட் கீப்பர் ஸ்டம்ப்பை ஒட்டி விக்கெட் கீப்பிங் செய்யும்போது, பந்து ஸ்டம்ப்பிற்கு பின்னால் வந்தபிறகு தான் பந்தை பிடிக்கவேண்டும். ஸ்டம்ப்புக்கு முன் கையை நீட்டிச்சென்று பந்தை பிடிக்கக்கூடாது. ஆனால் வங்கதேச விக்கெட் கீப்பர் நூருல் ஹசன் ஸ்டம்ப்புக்கு முன்னாள் கையை நீட்டி பந்தை பிடித்து ஸ்டம்பிங் செய்ததால் அந்த ஸ்டம்பிற்கு அவுட் கொடுக்கப்படாமல் நோ பால் கொடுக்கப்பட்டது. அந்த வீடியோ வைரலாகிவருகிறது.
 

click me!