டி20 உலக கோப்பை: பாகிஸ்தான் அபாரமான பவுலிங்.. நெதர்லாந்தை 91 ரன்களுக்கு சுருட்டிய நெதர்லாந்து

By karthikeyan V  |  First Published Oct 30, 2022, 2:28 PM IST

டி20 உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறும் மிகக்குறைவான வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் நெதர்லாந்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி, 20 ஓவரில் நெதர்லாந்தை வெறும் 91 ரன்களுக்கு சுருட்டியது.
 


டி20 உலக கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, இந்தியா மற்றும் ஜிம்பாப்வேவிடம் தோற்று இக்கட்டான நிலைக்கு சென்றது. பாகிஸ்தான் இடம்பெற்றுள்ள க்ரூப் 2ல் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் அபாரமாக ஆடி வெற்றி பெற்றுவருவதால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறுவது மிகக்கடினம்.

ஆனால் மிகக்குறைவான வாய்ப்பு இருக்கிறது. தென்னாப்பிரிக்காவை இந்தியாவும் வீழ்த்தி பாகிஸ்தானும் வீழ்த்தும்பட்சத்திலும், பாகிஸ்தான் வங்கதேசத்தையும் வீழ்த்தினால் அந்த அணிக்கு வாய்ப்பிருக்கிறது. எனவே வெற்றி கட்டாயத்தில் இன்று நெதர்லாந்தை எதிர்கொண்டது.

Latest Videos

undefined

டி20 உலக கோப்பையில் வரலாற்று சாதனை படைத்த க்ளென் ஃபிலிப்ஸ்..!

பெர்த்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் ஹைதர் அலிக்கு பதிலாக ஃபகர் ஜமான் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), ஷான் மசூத், ஃபகர் ஜமான், இஃப்டிகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம், ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா.

முதலில் பேட்டிங் ஆடிய நெதர்லாந்து வீரர்கள் தொடக்கம் முதலே பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலிங்கை சமாளித்து ஆடி ஸ்கோர் செய்ய முடியாமல் திணறினர். ரன்னே அடிக்கமுடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் இழந்தனர். ஷதாப் கான் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட் வீழ்த்தினார். 19வது ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார் முகமது வாசிம். நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக ஆக்கர்மேன் 27 ரன்கள் அடிக்க, அந்த அணி 20 ஓவரில் வெறும் 91 ரன்கள் மட்டுமே அடித்தது.

டி20 உலக கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

92 ரன்கள் என்ற எளிய இலக்கை முடிந்தவரை சீக்கிரமாக அடித்து வெற்றி பெறுவது பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும் கொஞ்சநஞ்ச வாய்ப்பை தக்கவைக்கலாம்.
 

click me!