நெதர்லாந்தை வீழ்த்தி டி20 உலக கோப்பையில் ஒருவழியா முதல் வெற்றியை பெற்ற பாகிஸ்தான்

டி20 உலக கோப்பையில் நெதர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது பாகிஸ்தான் அணி.
 

pakistan beat netherlands by 6 wickets in t20 world cup

டி20 உலக கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, இந்தியா மற்றும் ஜிம்பாப்வேவிடம் தோற்று இக்கட்டான நிலைக்கு சென்றது. கொஞ்சநஞ்ச அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்துடன் நெதர்லாந்தை எதிர்கொண்டது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் - நெதர்லாந்து இடையேயான பெர்த்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் ஹைதர் அலிக்கு பதிலாக ஃபகர் ஜமான் சேர்க்கப்பட்டார்.

Latest Videos

ஹர்திக் பாண்டியா மாதிரியான பிளேயரை உட்கார வச்சுட்டு ஆடியதால் தான் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றது - கவாஸ்கர்

பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), ஷான் மசூத், ஃபகர் ஜமான், இஃப்டிகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம், ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா.

முதலில் பேட்டிங் ஆடிய நெதர்லாந்து வீரர்கள் தொடக்கம் முதலே பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலிங்கை சமாளித்து ஆடி ஸ்கோர் செய்ய முடியாமல் திணறினர். ரன்னே அடிக்கமுடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் இழந்தனர். ஷதாப் கான் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட் வீழ்த்தினார். 19வது ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார் முகமது வாசிம். நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக ஆக்கர்மேன் 27 ரன்கள் அடிக்க, அந்த அணி 20 ஓவரில் வெறும் 91 ரன்கள் மட்டுமே அடித்தது.

92 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான பாபர் அசாம் 4 ரன்னில் ரன் அவுட்டானார். அதன்பின்னர் ஃபகர் ஜமான்(20), ஷான் மசூத்(12) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். வழக்கம்போலவே பொறுப்புடன் ஆடி அரைசதத்தை நெருங்கிய முகமது ரிஸான் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார்.

92 ரன்கள் என்ற எளிய இலக்கை 14வது ஓவரில் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த உலக கோப்பையில் முதல் வெற்றியை பெற்றது பாகிஸ்தான் அணி. ஆஸ்திரேலிய மண்ணில் சர்வதேச டி20 போட்டியிலும் இதுதான் பாகிஸ்தானின் முதல் வெற்றி.

கடைசி பந்தில் வங்கதேச விக்கெட் கீப்பர் செய்த தவறால் நோ-பால் கொடுத்த அம்பயர்..!

vuukle one pixel image
click me!
vuukle one pixel image