நெதர்லாந்து அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இந்திய அணியில் 9 ரோகித் சர்மா, விராட் கோலி உள்பட 9 வீரர்கள் பந்து வீசியுள்ளனர்.
உலகக் கோப்பையின் கடைசி லீக் போட்டி நேற்று நடந்தது. இதில், இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. பெங்களூருவில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 410 ரன்கள் குவித்தது. இதில், ஷ்ரேயாஸ் ஐயர் 128 (நாட் அவுட்), கேஎல் ராகுல் 102, ரோகித் சர்மா 61, சுப்மன் கில் 51 மற்றும் விராட் கோலி 51 ரன்கள் எடுத்தனர்.
undefined
பின்னர் கடின இலக்கை துரத்திய நெதர்லாந்து அணி வீரர்கள் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். தொடக்க வீரர் வெஸ்லி பாரேஸி 4 ரன்களில் ஆட்டமிழக்க, கொலின் அக்கர்மேன் 35 ரன்களில் வெளியேறினார். மேக்ஸ் ஓடவுட் 30, ஸ்காட் எட்வர்ட்ஸ் 17, பாஸ் டி லீட் 12, சைப்ரண்ட் ஏங்கல்ப்ரெக்ட் 45, லோகன் வான் பீக் 16, ரோலாஃப் வான் டெர் மெர்வே 16, ஆர்யன் தத் 5 என்று வரிசையாக ஆட்டமிழந்தனர். கடைசியாக, தேஜா நிடமானுரு 54 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் 9 லீக் போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா சாதனை!
போட்டியின் போது கேட்ச் பிடிக்க முயற்சித்த நிலையில், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜிற்கு தொண்டை பகுதியில் அடிபட்டு உடனடியாக வெளியேறும் நிலை ஏற்பட்டது. இந்திய அணி சிராஜ், பும்ரா, குல்தீப், ஜடேஜா, ஷமி என்று 5 பவுலர்களை மட்டுமே பயன்படுத்தி வந்தது. ஆதலால், சிராஜ் அடிபட்ட நிலையில், வெளியேறியதைத் தொடர்ந்து விராட் கோலி பவுலிங் செய்ய அழைக்கப்பட்டார். ஒரு விக்கெட்டும் எடுத்துக் கொடுத்தார்.
ஷமிக்கும் விக்கெட் விழவில்லை. இதன் காரணமாக அடுத்து சுப்மன் கில் பவுலிங் செய்தார். இவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் பவுலிங் செய்தார். சூர்யகுமார் யாதவ் பந்தில் அடுத்தடுத்து தேஜா நிடமானுரு 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். கடைசியாக ரோகித் சர்மாவும் பவுலிங் செய்து விக்கெட் வீழ்த்தினார். இப்படி ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் இந்திய அணியானது 9 பவுலர்கள் பயன்படுத்தியது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னதாக, இலங்கைக்கு (1987) எதிராக இங்கிலாந்து அணியும், பாகிஸ்தானிற்கு (1992) எதிரான நியூசிலாந்து அணியும் 9 பவுலர்களை பயன்படுத்தியுள்ளனர்.
India vs Netherlands: கடைசி லீக் போட்டியிலும் வெற்றி – உலகக் கோப்பையில் புதிய சாதனை படைத்த இந்தியா!