ENG vs IND: 3வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்..! விராட் கோலிக்கு இடம் இருக்கா இல்லையா..?

Published : Jul 10, 2022, 03:22 PM ISTUpdated : Jul 10, 2022, 03:32 PM IST
ENG vs IND: 3வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்..! விராட் கோலிக்கு இடம் இருக்கா இல்லையா..?

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது.

டிரெண்ட்பிரிட்ஜில் நடக்கும் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. ஆறுதல் வெற்றியாவது பெறும் முனைப்பில் இங்கிலாந்து அணி உள்ளது.

இதையும் படிங்க - சிஎஸ்கேவிலிருந்து வெளியேறுகிறார் ஜடேஜா! சிஎஸ்கே தொடர்பான சமூக வலைதள பதிவுகளை மொத்தமாக நீக்கிய ஜடேஜா

இந்திய அணி தொடரை வென்றுவிட்டதால் இந்த போட்டியில், முந்தைய 2 போட்டிகளில் ஆடாத வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம். 2வது டி20 போட்டியிலும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்த விராட் கோலி, அழுத்தமே இல்லாத இந்த போட்டியிலாவது நன்றாக ஆடலாம். அதனால் அவருக்கு இந்த போட்டியிலும் ஆடும் லெவனில் இடம் கிடைக்கும்.

புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல் ஆகிய மூவருக்கு பதிலாக உம்ரான் மாலிக், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் ஆகிய மூவரும் இடம்பெறலாம்.

இதையும் படிங்க - கோலிக்காக நல்லா ஆடுற இளம் வீரர்களை பழி கொடுத்துராதீங்க! அருமையான எடுத்துக்காட்டுடன் அதகளம் செய்த கபில் தேவ்

3வது டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ரிஷப் பண்ட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, உம்ரான் மாலிக், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IPL Auction 2026: சிஎஸ்கே வாங்கிய வீரர்கள் யார்? யார்? CSK அணி வீரர்கள் முழு பட்டியல் இதோ!
IPL Auction 2026: விலை போன வீரர்கள் யார்? யார்? விலை போகாத வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட் இதோ!