WI vs IND: இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்..! 3வது ODIக்கான உத்தேச ஆடும் லெவன்.. இளம் வீரர் ஒருவர் அறிமுகம்

Published : Jul 26, 2022, 05:20 PM IST
WI vs IND: இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்..! 3வது ODIக்கான உத்தேச ஆடும் லெவன்.. இளம் வீரர் ஒருவர் அறிமுகம்

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், 3வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.

3வது போட்டியிலும் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணியும், கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் களமிறங்குகின்றன.

இதையும் படிங்க - ஒருநாள் கிரிக்கெட்டை சுவாரஸ்யமாக்க அஃப்ரிடியின் ஐடியாவை வழிமொழியும் ரவி சாஸ்திரி..! இதுகூட நல்லாத்தான் இருக்கு

இந்திய அணி தொடரை ஏற்கனவே வென்றுவிட்டதால் கடைசி போட்டியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம். தொடக்க வீரராக ஷுப்மன் கில்லுக்கு பதிலாக, முதல் 2 போட்டிகளில் வாய்ப்பு பெறாத ருதுராஜ் கெய்க்வாட் இறக்கப்படலாம். 

மேலும் ஃபாஸ்ட் பவுலர் முகமது சிராஜுக்கு பதிலாக இளம் இடது கை ஃபாஸ்ட் பவுலர் அர்ஷ்தீப் சிங் அறிமுகமாகலாம். இஷான் கிஷனும் முதல் 2 போட்டிகளில் ஆட வாய்ப்பு பெறவில்லை. ஆனால் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் நன்றாக செய்துவருகிறார். 2வது போட்டியில் பேட்டிங்கும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். எனவே அவருக்கு தொடர் வாய்ப்பளிக்கப்படும்.

இதையும் படிங்க - Axar Patel Record: தோனி, யூசுஃப் பதானின் நீண்டகால சாதனையை தகர்த்த அக்ஸர் படேல்..!

உத்தேச இந்திய அணி:

ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Rohit Sharma: ரிட்டையர்மென்ட் வதந்திக்கு பேட்டால் பதிலடி! லார்ட்ஸில் வரலாற்று சதம் அடித்த ஹிட்மேன்!
IND vs ENG: ரோஹித் சதம் அடித்தும் இந்தியா தோல்வி... லார்ட்ஸில் கோட்டைவிட்ட 5 இடங்கள்..