#SLvsIND கடைசி ஒருநாள் போட்டி: இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

Published : Jul 21, 2021, 09:34 PM IST
#SLvsIND கடைசி ஒருநாள் போட்டி: இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

இந்தியா - இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி நிர்ணயித்த 263 ரன்கள் என்ற இலக்கை 37வது ஓவரிலேயே அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 2வது ஒருநாள் போட்டியில் தீபக் சாஹரின் பொறுப்பான பேட்டிங்கால்(69*) 276 ரன்கள் என்ற இலக்கை விரட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி வரும் 23ம் தேதி நடக்கிறது. இந்திய அணி தொடரை வென்றுவிட்டதால், கடைசி போட்டியில், முதல் 2 போட்டிகளில் ஆடாத வீரர்களில் ஒருசிலருக்கு வாய்ப்பு கொடுக்கமுடியும். ஆனால், முதல் 2 போட்டிகளில் ஆடிய வீரர்களே அணியில் தங்களுக்கான நிரந்தர இடத்தை தேடிக்கொண்டிருப்பதால், அவர்களில் யாரையும் தூக்க வாய்ப்பில்லை.

எனவே கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. முதல் 2 போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

உத்தேச இந்திய அணி:

ஷிகர் தவான்(கேப்டன்), பிரித்வி ஷா, இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SL Test: 33 வயதில் இந்திய அணியில் அறிமுகமாகும் வீரர்! யார் இந்த சரன்ஷ் ஜெயின்? பிசிசிஐ தேர்வு செய்தது ஏன்?
Hidden Talents: பாட்டு, டான்ஸ், மெக்கானிக்... நம்ம கிரிக்கெட் வீரர்களின் மறுபக்கம்..!