எப்படி பேட்டிங் ஆடணும்னு தீபக் சாஹரிடம் இருந்து கத்துக்கங்கடா..! பாக்., வீரர்களுக்கு டேனிஷ் கனேரியா அட்வைஸ்

By karthikeyan VFirst Published Jul 21, 2021, 9:00 PM IST
Highlights

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் எப்படி பேட்டிங் ஆடவேண்டும் என்று தீபக் சாஹரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று டேனிஷ் கனேரியா அறிவுறுத்தியுள்ளார். அறிவுரை கூறியுள்ளார் கூறியுள்ளார்.
 

இந்தியா - இலங்கை இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது. இலங்கை அணி நிர்ணயித்த 276 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 193 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் தீபக் சாஹரின் பொறுப்பான பேட்டிங் மற்றும் அவருக்கு புவனேஷ்வர் குமார் கொடுத்த ஒத்துழைப்பால் இந்திய அணி கடைசி ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

வெற்றி பெற வேண்டிய இந்த போட்டியில் தீபக் சாஹரின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தோல்வியை தழுவியது இலங்கை அணி. தீபக் சாஹர் 69 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

27வது ஓவரிலேயே 8வது பேட்ஸ்மேனாக களத்திற்கு வந்துவிட்ட தீபக் சாஹர், நிதானத்தை கடைபிடித்து தெளிவாகவும் பொறுமையுடனும் பேட்டிங் ஆடி ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச்சென்று, முதிர்ச்சியான பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

தீபக் சாஹரின் பேட்டிங்கை முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் புகழ்ந்துவருகின்றனர். இந்நிலையில், தீபக் சாஹரின் பேட்டிங் குறித்து பேசிய பாகிஸ்தான் முன்னாள் ஸ்பின்னர் டேனிஷ் கனேரியா, முழு கிரெடிட்டும் தீபக் சாஹருக்கே. பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச்சென்று அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். களத்தில் நிலைத்து நின்று, ஸ்மார்ட்டாக சிங்கிள் ரொடேட் செய்து ஆடினார். அவ்வப்போது பவுண்டரிகளையும் அடித்தார். தீபக் சாஹர் மற்றும் புவனேஷ்வர் குமாருக்கு இடையேயான பார்ட்னர்ஷிப் அருமையானது என்று டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.
 

click me!