தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
டி20 உலக கோப்பைக்கு முந்தைய கடைசி டி20 தொடர் என்பதால் இந்திய அணி இந்த தொடரை வென்று அதே நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் டி20 உலக கோப்பைக்கு செல்லும் முனைப்பில் உள்ளது.
இதையும் படிங்க - பும்ராவின் காயத்திற்கு ரோஹித் மற்றும் டிராவிட் தான் காரணம்..?
அதுமட்டுமல்லாது இந்திய மண்ணில் டி20 தொடரில் தோல்வியை தழுவிராத வரலாற்றை கொண்ட தென்னாப்பிரிக்க அணிக்கு முதல் டி20 தொடர் தோல்வியை பரிசளிக்கும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.
1-0 என இந்த தொடரில் முன்னிலை வகிப்பதால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி தென்னாப்பிரிக்காவை இந்த டி20 தொடரில் தோற்கடிக்கும் முனைப்பில் கவுகாத்தியில் நடக்கும் 2வது டி20 போட்டியில் களமிறங்குகிறது இந்திய அணி. 2வது டி20 போட்டி நாளை(அக்டோபர் 2) கவுகாத்தியில் நடக்கிறது. இந்த தொடரிலிருந்து காயம் காரணமாக ஜஸ்ப்ரித் பும்ரா விலகியதால் அவருக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.
2வது டி20 போட்டியில் களமிறங்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ரோஹித் சர்மா - கேஎல் ராகுல் தொடக்க வீரர்கள். 3ம் வரிசையில் கோலி, 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், 5ம் வரிசையில் ரிஷப் பண்ட், ஃபினிஷர் தினேஷ் கார்த்திக். ஸ்பின் பவுலர்களாக கடந்த போட்டியில் ஆடிய அக்ஸர் படேல் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வினே ஆடுவார்கள்.
ஃபாஸ்ட் பவுலிங் காம்பினேஷனிலும் மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை. தீபக் சாஹர், ஹர்ஷல் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரையே இந்திய அணி களமிறக்கிவிடும். ஏனெனில் இவர்களில் தீபக் சாஹரை தவிர மற்ற இருவரும் டி20 உலக கோப்பைக்கான அணியில் இருக்கின்றனர். தீபக்சாஹரும் ஸ்டாண்ட்பை வீரராக எடுக்கப்பட்டுள்ளார். எனவே இவர்கள் மூவரையுமே களமிறக்கும். முகமது சிராஜுக்கு ஆட வாய்ப்பு கிடைக்காது.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இவங்க 4 பேரும் கண்டிப்பா இருந்திருக்கணும்..!
உத்தேச இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், தீபக் சாஹர், அர்ஷ்தீப் சிங்.