டி20 உலக கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

team india probable playing eleven for the match against south africa in t20 world cup

டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையில் எதிர்பார்த்தபடியே இந்திய அணி சிறப்பாக ஆடிவருகிறது. பும்ரா ஆடாதது பெரிய பாதிப்பாக அமையும் என  அஞ்சப்பட்ட நிலையில், இதுவரை அது பெரிய பாதிப்பாக அமையவில்லை.

சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானையும், 2வது போட்டியில் நெதர்லாந்தையும் வீழ்த்தி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை நாளை பெர்த்தில் எதிர்கொள்கிறது. க்ரூப் 2ல் மிகச்சிறப்பாக ஆடிவரும் மற்றும் சமபலம் வாய்ந்த இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் நாளை மோதுவதால் இந்த போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Latest Videos

தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலிங்கை இந்திய வீரர்களால் சமாளிக்க முடியாது! இந்தியஅணி தோற்றுவிடும்- லான்ஸ் க்ளூசனர்

பெர்த்தில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம். இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகிய 4 பெரிய பேட்ஸ்மேன்களும் நல்ல ஃபார்மில் அருமையாக ஆடிவருகின்றனர். தொடக்க வீரர் கேஎல் ராகுலின் ஃபார்ம் தான் கவலையளிக்கிறது. ஆனால் டாப் 3ல் ரோஹித்தும் கோலியும் நன்றாக ஆடுவதால் ராகுல் ஸ்கோர் செய்யாதது பாதிப்பாக அமையவில்லை.

பாகிஸ்தானுக்கு எதிராக 4 பந்தில் ஒரு ரன்னும், நெதர்லாந்துக்கு எதிராக 12 பந்தில் 9 ரன்களும் மட்டுமே அடித்தார் ராகுல். அவரது ஃபார்ம் கவலையளிக்கும் விதமாக இருந்தாலும், ரோஹித் - கோலி நன்றாக ஆடுவதால் ராகுலுக்கு இன்னும் வாய்ப்பளிக்கப்படும். ராகுலை ஆடும் லெவனிலிருந்து நீக்கும் திட்டமில்லை என்பதை பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெளிவாக தெரிவித்துவிட்டார். எனவே ராகுல் கண்டிப்பாக ஆடுவார்.

மற்றபடி பவுலிங் யூனிட்டில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. அதற்கான தேவையுமில்லை. ஏனெனில் பும்ரா இல்லாவிட்டாலும், புவனேஷ்வர் குமார், ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகிய ஃபாஸ்ட் பவுலர்கள் மற்றும் அஷ்வின், அக்ஸர் ஆகிய ஸ்பின்னர்களும் அபாரமாக பந்துவீசிவருகின்றனர். இந்திய அணி தொடர்ச்சியாக   2 வெற்றிகளை பெற்றிருப்பதால் வின்னிங் காம்பினேஷனை மாற்ற வேண்டிய அவசியமில்லை. அதனால் முதல் 2 போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்திய அணி களமிறங்கும்.

டி20 உலக கோப்பை: ராகுலுக்கு பதில் ரிஷப் பண்ட்? இந்திய அணி அதிரடி முடிவு? பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் தகவல்

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image