டி20 உலக கோப்பை: டிரெண்ட் போல்ட் சூப்பர் பவுலிங்.. இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி

By karthikeyan V  |  First Published Oct 29, 2022, 5:05 PM IST

டி20 உலக கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று 5 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் வலுவாக நீடிக்கிறது.
 


டி20 உலக கோப்பை தொடரில் க்ரூப் 1ல் முக்கியமான போட்டியில் இன்று நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. சிட்னியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணி:

Latest Videos

undefined

ஃபின் ஆலன், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் ஃபிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், டேரைல் மிட்செல், மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி, டிம் சௌதி, லாக்கி ஃபெர்குசன், டிரெண்ட் போல்ட்.

ஹர்திக் பாண்டியா மாதிரியான பிளேயரை உட்கார வச்சுட்டு ஆடியதால் தான் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றது - கவாஸ்கர்

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, பானுகா ராஜபக்சா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்‌ஷனா, லஹிரு குமாரா, கசுன் ரஜிதா.

முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன்(1) மற்றும் டெவான் கான்வே(1) ஆகிய இருவரும் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். கேப்டன் கேன் வில்லியம்சனை 8 ரன்னுக்கு வீழ்த்தினார் கசுன் ரஜிதா. 15 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி திணறிய நிலையில், 4வது விக்கெட்டுக்கு க்ளென் ஃபிலிப்ஸ் - டேரைல் மிட்செல் இணைந்து 84 ரன்களை சேர்த்தனர். டேரைல் மிட்செல் 22 ரன்களுக்கும், ஜிம்மி நீஷம் 5 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடி சதமடித்த க்ளென் ஃபிலிப்ஸ் தனி ஒருவனாக நியூசிலாந்து அணியை கரைசேர்த்தார். அதிரடியாக ஆடி சதமடித்த ஃபிலிப்ஸ் 64 பந்தில் 104 ரன்கள் அடித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். டி20 உலக கோப்பையில் பிரண்டன் மெக்கல்லமிற்கு பிறகு சதமடித்த 2வது நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார் க்ளென் ஃபிலிப்ஸ். க்ளென் ஃபிலிப்ஸின் அதிரடி சதத்தால் 20 ஓவரில் 167 ரன்கள் அடித்தது நியூசிலாந்து அணி.

தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலிங்கை இந்திய வீரர்களால் சமாளிக்க முடியாது! இந்தியஅணி தோற்றுவிடும்- லான்ஸ் க்ளூசனர்

168 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் ராஜபக்சா(34) மற்றும் கேப்டன் தசுன் ஷனாகா (35) ஆகிய இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்னேஅடித்தனர். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கம் அல்லது டக் அவுட்டானார்கள். 19.2 ஓவரில் 102 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட்டாக, 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று க்ரூப் 1 புள்ளி பட்டியலில் முதலிடத்தில் வலுவாக நீடிக்கிறது. இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய டிரெண்ட்போல்ட் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
 

click me!