டி20 உலக கோப்பை: ராகுலுக்கு பதில் ரிஷப் பண்ட்? இந்திய அணி அதிரடி முடிவு? பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் தகவல்

By karthikeyan VFirst Published Oct 29, 2022, 5:41 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுலை நீக்கிவிட்டு ரிஷப் பண்ட்டை சேர்ப்பது குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து கூறியுள்ளார்.
 

டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையில் எதிர்பார்த்தபடியே இந்திய அணி சிறப்பாக ஆடிவருகிறது. பும்ரா ஆடாதது பெரிய பாதிப்பாக அமையும் என  அஞ்சப்பட்ட நிலையில், இதுவரை அது பெரிய பாதிப்பாக அமையவில்லை.

சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானையும், 2வது போட்டியில் நெதர்லாந்தையும் வீழ்த்தி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை நாளை பெர்த்தில் எதிர்கொள்கிறது. க்ரூப் 2ல் மிகச்சிறப்பாக ஆடிவரும் மற்றும் சமபலம் வாய்ந்த இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் நாளை மோதுவதால் இந்த போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஹர்திக் பாண்டியா மாதிரியான பிளேயரை உட்கார வச்சுட்டு ஆடியதால் தான் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றது - கவாஸ்கர்

இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகிய 4 பெரிய பேட்ஸ்மேன்களும் நல்ல ஃபார்மில் அருமையாக ஆடிவருகின்றனர். தொடக்க வீரர் கேஎல் ராகுலின் ஃபார்ம் தான் கவலையளிக்கிறது. ஆனால் டாப் 3ல் ரோஹித்தும் கோலியும் நன்றாக ஆடுவதால் ராகுல் ஸ்கோர் செய்யாதது பாதிப்பாக அமையவில்லை.

பாகிஸ்தானுக்கு எதிராக 4 பந்தில் ஒரு ரன்னும், நெதர்லாந்துக்கு எதிராக 12 பந்தில் 9 ரன்களும் மட்டுமே அடித்தார் ராகுல். இந்நிலையில், ராகுலுக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை சேர்ப்பது குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரிடம் கேட்கப்பட்டது.

தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலிங்கை இந்திய வீரர்களால் சமாளிக்க முடியாது! இந்தியஅணி தோற்றுவிடும்- லான்ஸ் க்ளூசனர்

அதற்கு பதிலளித்து பேசிய விக்ரம் ரத்தோர், கண்டிப்பாக இல்லை. ராகுல் பயிற்சி போட்டிகளில் அருமையாக ஆடினார். அவர் திறமையான வீரர். எனவே ராகுலை நீக்குவது பற்றி யோசிக்கவில்லை. 11 வீரர்கள் தான் ஆடமுடியும். ரிஷப் பண்ட் எப்பேர்ப்பட்ட அணியையும் அடித்து துவம்சம் செய்யும் அபாயகரமான வீரர் தான். ஆனாலும் என்ன செய்வது என்று பேசினார்.

click me!