#SLvsIND முதல் டி20: இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு.. இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

Published : Jul 24, 2021, 09:52 PM IST
#SLvsIND முதல் டி20: இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு.. இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

இந்தியா - இலங்கை இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இந்திய அணி வென்றது. இதையடுத்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி நாளை நடக்கிறது. நாளை(25ம் தேதி) இரவு 8 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

அந்த போட்டிக்கான இந்திய அணியில் ஒருநாள் தொடரில் ஆடாத டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் மற்றும் ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அனைவருக்கும் முடிந்தவரை ஒரு போட்டியிலாவது ஆட வாய்ப்பளிக்க வேண்டும் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நினைக்கிறார். எனவே தேவ்தத் படிக்கல் மற்றும் வருண் சக்கரவர்த்திக்கு அணியில் இடம் கிடைக்கும்.

உத்தேச இந்திய அணி:

ஷிகர் தவான்(கேப்டன்), தேவ்தத் படிக்கல், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, தீபக் சாஹர், ராகுல் சாஹர், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs WI 5th T20: பெங்களூருவில் கொட்டித் தீர்த்த மழை.. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர் 2-2 என சமன்!
டாஸ் வென்றும் இந்தியாவுக்கு பேரிடி! ஹோப்பின் சதம், சாம்சனின் போராட்டம்... தோல்விக்கான 3 காரணங்கள்!