ZIM vs IND: முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்..! ஷுப்மன் கில்லுக்கு புதிய ரோல்

By karthikeyan VFirst Published Aug 16, 2022, 9:18 PM IST
Highlights

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய மெயின் அணி வரும் 24ம் தேதி அமீரகத்திற்கு செல்கிறது.

இதற்கிடையே இந்திய அணி ஜிம்பாப்வேவிற்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன. ஆனால் ஆசிய கோப்பைக்கான இந்திய அணி 24ம் தேதி அமீரகத்திற்கு செல்ல வேண்டும். 

இதையும் படிங்க - இந்திய அணியில் தொடர்ந்து கேப்டன்சி மாற்றம்..! பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய மெயின் அணி ஆசிய கோப்பையில் ஆட செல்வதால், கேஎல் ராகுல் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் ஆடுகிறது. 

ஆகஸ்ட் 18ம் தேதி ஹராரேவில் முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ளது. இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

இந்திய அணியில் கேஎல் ராகுல், ஷிகர் தவான், ஷுப்மன் கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய 4 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இவர்களில் கேப்டன் கேஎல் ராகுலும் ஷிகர் தவானும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் டாப் ஆர்டரில் அபாரமாக விளையாடிய ஷுப்மன் கில்லுக்கு ஓபனிங்கில் இறங்க வாய்ப்பு கிடைக்காது என்றாலும், அவர் 3ம் வரிசையில் இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரை ஆடும் லெவனில் புறக்கணிக்க முடியாது. ஏனெனில் கடைசியாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி 3 போட்டிகளில் 205 ரன்களை குவித்திருந்தார். 

இதையும் படிங்க - சூர்யகுமாருக்கு ஏற்ற பேட்டிங் ஆர்டர் இதுதான்..! லெஜண்ட் ரிக்கி பாண்டிங் கருத்து

4ம்வரிசையில் இஷான் கிஷனும், 5ம் வரிசையில் சஞ்சு சாம்சனும், 6ம் வரிசையில் தீபக் ஹூடாவும் இறங்குவார்கள் என எதிர்பார்க்கலாம். ஸ்பின்னர்களாக அக்ஸர் படேல் மற்றும் குல்தீப் யாதவும், ஃபாஸ்ட் பவுலர்களாக ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய மூவரும் ஆடுவார்கள்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்:

கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.
 

click me!