ஆசிய கோப்பைக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு..! 2 ஆண்டுக்கு பிறகு களமிறக்கப்படும் ஆல்ரவுண்டர்

Published : Aug 16, 2022, 08:05 PM IST
ஆசிய கோப்பைக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு..! 2 ஆண்டுக்கு பிறகு களமிறக்கப்படும் ஆல்ரவுண்டர்

சுருக்கம்

ஆசிய கோப்பைக்கான முகமது நபி தலைமையிலான 17 வீரர்களை கொண்ட ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 5 அணிகளுடன் தகுதிச்சுற்றில் ஜெயிக்கும் அணி 6வது அணியாக இணையும்.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்று போட்டியில் தகுதிபெறும் அணி ஆகிய 3 அணிகளும் ஏ பிரிவிலும், வங்கதேசம், இலங்கை, ஆஃப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளும் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க - ZIM vs IND: ஜிம்பாப்வே ஒருநாள் தொடரிலிருந்து காயத்தால் விலகிய வாஷிங்டன் சுந்தருக்கு மாற்று வீரர் அறிவிப்பு

இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி ஆகஸ்ட் 28ம் தேதி நடக்கிறது. அதன்பின்னரும் இந்த தொடரில் மேலும் 2 முறை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும்.

ஆசிய கோப்பை தொடருக்கான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இன்று ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆல்ரவுண்டர் முகமது நபி தலைமையிலான 17 வீரர்களை கொண்ட ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணியில்  ரஷீத் கான், ரஹ்மானுல்லா குர்பாஸ், நவீன் உல் ஹக், ஃபரூக்கி, ஹஸ்ரதுல்லா சேஸாய், முஜீபுர் ரஹ்மான் ஆகிய வழக்கமான வீரர்களுடன் சில சர்ப்ரைஸ் தேர்வுகளும் உள்ளன.

கடைசியாக 2020ம் ஆண்டு மார்ச் மாதம் ஆஃப்கானிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய ஆல்ரவுண்டர் சமியுல்லா ஷின்வாரி 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆஃப்கானிஸ்தான் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க - இந்திய அணியில் தொடர்ந்து கேப்டன்சி மாற்றம்..! பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம்

19 வயதே ஆன இடது ரிஸ்ட் ஸ்பின்னரான (சைனா மேன் பவுலர்) நூர் அகமது ஆசிய கோப்பைக்கான ஆஃப்கானிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளார்.

ஆசிய கோப்பைக்கான ஆஃப்கானிஸ்தான் அணி:

முகமது நபி (கேப்டன்), நஜிபுல்லா ஜட்ரான், அஸ்மதுல்லா ஒமர்ஸாய், அஃப்சர் சேஸாய், ஃபஸல்ஹக் ஃபரூக்கி, ஃபரித் அகமது மாலிக், ஹஷ்மதுல்லா ஷாஹிடி, ஹஸ்ரதுல்லா சேஸாய், இப்ராஹிம் ஜட்ரான், கரிம் ஜனத், முஜிபுர் ரஹ்மான், நவீன் உல் ஹக், நஜிபுல்லா ஜட்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், நூர் அகமது, சமியுல்லா ஷின்வாரி, ரஷீத் கான்.

PREV
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!