#SLvsIND முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

Published : Jul 17, 2021, 06:16 PM IST
#SLvsIND முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கைக்கு சென்றுள்ளது. ராகுல் டிராவிட்டின் பயிற்சியில் இந்திய அணியில் இந்த தொடரில் ஆடுகிறது.

இந்திய இளம் வீரர்களுக்கு இந்த இலங்கை தொடர் ஓர் அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது. எனவே இந்திய அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களுமே ஆடும் லெவனில் தங்களுக்கான வாய்ப்பிற்காக காத்திருக்கின்றனர். 

நாளை(ஜூலை 18) முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ள நிலையில், கொழும்பில் நடக்கும் அந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

கேப்டன் ஷிகர் தவானுடன் பிரித்வி ஷா தொடக்க வீரராக இறங்குவார். 3ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ் ஆடுவார். விக்கெட் கீப்பராக களமிறங்கும் சஞ்சு சாம்சன், 4ம் வரிசையில் பேட்டிங் ஆடுவார். அதன்பின்னர் மனீஷ் பாண்டே இறங்குவார். ஆல்ரவுண்டர்களாக பாண்டியா பிரதர்ஸ் ஆடுவர்.

ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார் மற்றும் தீபக் சாஹரும், ஸ்பின்னர்களாக குல்தீப் மற்றும் சாஹலும் ஆடுவர்.
 
உத்தேச இந்திய அணி:

ஷிகர் தவான்(கேப்டன்), பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.
 

PREV
click me!

Recommended Stories

Vaibhav Suryavanshi: ஐபிஎல் போட்டியில் புதிய சாதனை! மேக்ஸ்வெல் ரெக்கார்டு ஊதி தள்ளிய 15 வயதான இளம் வீரர் வைபவ்!
Most T20 Centuries: டி20-ல் அதிக சதம்..! கோலியின் சாதனையை சமன் செய்த இளம் வீரர்..!