#SLvsIND முதல் ஒருநாள் போட்டி: தாதாவின் சாதனையை தகர்க்க காத்திருக்கும் தவான்..! தரமான சம்பவம்

By karthikeyan VFirst Published Jul 17, 2021, 5:20 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தவான் வெறும் 23 ரன்கள் அடித்தால் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டுவார்.
 

 

விராட் கோலி தலைமையிலான இந்திய மெயின் அணி  5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. எனவே இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஆட ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ளது.

நாளை(ஜூலை 18) முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ள நிலையில், அந்த போட்டியில் 23 ரன்கள் அடித்தால் தவான், புதிய மைல்கல்லை எட்டுவார். இதுவரை 139 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 5977 ரன்களை குவித்துள்ள தவான், இந்த போட்டியில் 23 ரன்கள் அடித்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவில் 6000 ரன்களை கடந்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

விராட் கோலி 136 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 6000 ரன்களை அடித்தார். கங்குலி 149 இன்னிங்ஸ்களில் 6000 ரன்கள் அடித்தார். தவான் இந்த போட்டியில் அடித்தால் 140 இன்னிங்ஸ்களில் 6000 ரன்களை அடித்து, விராட் கோலிக்கு அடுத்து, வேகமாக 6000 ஒருநாள் ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

சர்வதேச அளவில் இந்த பட்டியலில் 123 இன்னிங்ஸ்களில் 6 ஆயிரம் ரன்கள் அடித்த ஹாஷிம் ஆம்லா முதலிடத்திலும், கோலி இரண்டாமிடத்திலும், 139 இன்னிங்ஸ்களில் 6 ஆயிரம் ரன்கள் அடித்த வில்லியம்சன் 3ம் இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் தவான் நான்காமிடம் பிடிப்பார்.

click me!