#ENGvsIND அந்த விஷயத்துலலாம் நான் தலையிடுறதே இல்ல..! அணி நிர்வாகம் பார்த்துக்கும்.. தாதா தடாலடி

By karthikeyan VFirst Published Jul 17, 2021, 4:21 PM IST
Highlights

ஷுப்மன் கில்லுக்கு மாற்று வீரர் குறித்த விஷயத்தில் எல்லாம் நான் தலையிடுவதில்லை; அணி நிர்வாகமே அதை பார்த்துக்கொள்ளும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ள நிலையில், அந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தொடக்க வீரர் ஷுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டது.

ஷுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டாலும், மயன்க் அகர்வால் அணியில் இருப்பதால் அவர் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்குவார். கேஎல் ராகுல் அணியில் இருந்தாலும், அவரை மிடில் ஆர்டரில் இறக்கும் திட்டத்தில் இந்திய அணி இருப்பதால், மாற்று தொடக்க வீரர் ஒருவர் தேவை என்பதால், இலங்கை சுற்றுப்பயணத்தில் இருக்கும் பிரித்வி ஷா மற்றும் தேவ்தத் படிக்கல்லை இங்கிலாந்துக்கு அனுப்புமாறு இந்திய அணி நிர்வாக கோரிக்கை விடுத்தது. ஆனால் தேர்வாளர்களும், பிசிசிஐயும் மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், ஷுப்மன் கில்லுக்கு மாற்று வீரர் குறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, அந்த விஷயங்களில் எல்லாம் நான் தலையிடுவதில்லை. அணி நிர்வாகம் தான் அதுகுறித்தெல்லாம் முடிவெடுக்கும் என்று ஒரே வாக்கியத்தில் முடித்துவிட்டார் கங்குலி.
 

click me!