#ENGvsIND இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட 4 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்..!

Published : Sep 05, 2021, 03:43 PM IST
#ENGvsIND இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட 4 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்..!

சுருக்கம்

இங்கிலாந்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட 4 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதனால் 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் 3 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என சமனடைந்துள்ளது. 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடந்துவருகிறது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டுவரும் நிலையிலும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் மற்றும் ஃபிசியோதெரபிஸ்ட்  நிதின் படேல் ஆகிய நால்வருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர்கள் நால்வரும் தங்கியிருக்கும் ஹோட்டலிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த அனைவருக்கும் நேற்றிரவு மற்றும் இன்று காலை என தொடர்ந்து 2 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், அவர்கள் நால்வரை தவிர மற்ற அனைவருக்குமே நெகட்டிவ் என்று தான் ரிசல்ட் வந்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA 1st T20: இந்தியா பேட்டிங்..! சஞ்சு சாம்சன், நம்பர் 1 ஸ்பின்னர் நீக்கம்! பிளேயிங் லெவன்!
ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி