டி20 உலக கோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய 4 அணிகளும் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. சூப்பர் 12 சுற்றில் இந்திய அணியின் முழு போட்டி விவரத்தை பார்ப்போம்.
டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய 8 அணிகளும் நேரடியாக தகுதிபெற்றன.
எஞ்சிய 4 இடங்களை பிடிக்க 8 அணிகள் தகுதிச்சுற்றில் மோதின. அதில் க்ரூப் ஏ-வில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளும், க்ரூப் பி-யில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளும் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின.
undefined
சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 1-ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் ஏற்கனவே இடம்பெற்றிருந்த நிலையில், தகுதிச்சுற்றில் ஜெயித்த இலங்கை (ஏ1) மற்றும் அயர்லாந்து (பி2) அணிகளும் க்ரூப் 1-ல் இடம்பெற்றுள்ளன.
க்ரூப் 2-ல் ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய 4 அணிகளும் இடம்பெற்றிருந்த நிலையில், தகுதிச்சுற்றில் ஜெயித்த ஜிம்பாப்வே(பி1) மற்றும் நெதர்லாந்து (ஏ2) ஆகிய அணிகள் க்ரூப் 2-ல் இடம்பிடித்துள்ளன.
எனவே இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகளை எதிர்கொள்கிறது.
இந்திய அணியின் சூப்பர் 12 சுற்று போட்டி விவரத்தை பார்ப்போம்.
இந்தியா - பாகிஸ்தான் (23.10.2022) - மெல்பர்ன்
இந்தியா - நெதர்லாந்து (27.10.2002) - சிட்னி
இந்தியா - தென்னாப்பிரிக்கா (30.10.2022) - பெர்த்
இந்தியா - வங்கதேசம் (02.11.2022) - அடிலெய்ட்
இந்தியா - ஜிம்பாப்வே (06.11.2022) - மெல்பர்ன்
இதையும் படிங்க - வாய்ச்சொல் வீரன் பாகிஸ்தானை பயங்கரமா பங்கம் செய்த இந்திய முன்னாள் வீரர்.!
இந்திய அணி இந்த 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறுவதைத்தான் விரும்பும். ஏனெனில், இந்திய அணி இடம்பெற்றிருக்கும் க்ரூப்பில் இந்தியா எளிதில் வீழ்த்தக்கூடிய சிறிய அணிகள் அதிகம் இடம்பெற்றிருந்தாலும், இந்திய அணி அந்த அணிகளை மட்டும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுவதை விரும்பாது. தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளையும் வீழ்த்தி கெத்தாக அரையிறுதிக்கு முன்னேறத்தான் விரும்பும்.