தனி ஒருவனா டி20 உலக கோப்பையை ஜெயிச்சு கொடுக்கவல்ல மேட்ச் வின்னர்..! இந்திய வீரருக்கு ஷேன் வாட்சன் புகழாரம்

By karthikeyan VFirst Published Oct 21, 2022, 4:20 PM IST
Highlights

இந்திய அணிக்கு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனி நபராக டி20 உலக கோப்பையை வென்று கொடுக்கவல்லவர் என்றும் அவர் மிகப்பெரிய மேட்ச் வின்னர் என்றும் ஷேன் வாட்சன் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

டி20 உலக கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் இன்றுடன் முடியும் நிலையில், நாளையிலிருந்து(அக்டோபர் 22) சூப்பர் 12 சுற்று போட்டிகள் தொடங்கவுள்ளன. 23ம் தேதி மெல்பர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.

இந்த டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்திய அணி, முதல் சூப்பர் 12 சுற்று போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. பாகிஸ்தானை வீழ்த்துவது மட்டுமல்லாது, அடுத்தடுத்த போட்டிகளிலும் வெற்றி பெறுவதுடன், டி20 உலக கோப்பையையும் வெல்லும் நோக்கில் இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது.

இதையும் படிங்க - வாய்ச்சொல் வீரன் பாகிஸ்தானை பயங்கரமா பங்கம் செய்த இந்திய முன்னாள் வீரர்.!

ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் என இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மிக வலுவாக உள்ளது. அக்ஸர் படேல், அஷ்வின், சாஹல் என ஸ்பின் பவுலிங்கும் சிறப்பாக உள்ளது. பும்ரா இல்லாததால் இந்திய அணியின் டெத் பவுலிங் தான் கவலையாக உள்ளது. புவனேஷ்வர் குமார், ஷமி ஆகிய சீனியர் பவுலர்கள் இருந்தாலும், டெத் ஓவர் கவலை இந்திய அணிக்கு இருக்கவே செய்கிறது. அதுமட்டுமல்லாது 140 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய பவுலர் இல்லாததும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டெத் பவுலிங் பிரச்னைக்கு தீர்வாவது மட்டுமல்லாது, டி20 உலக கோப்பையையே இந்திய அணிக்கு ஜெயித்து கொடுக்கவல்ல மேட்ச் வின்னர் ஹர்திக் பாண்டியா தான் என்று ஷேன் வாட்சன் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ஷேன் வாட்சன்,  ஹர்திக் பாண்டியா மிகத்திறமையான கிரிக்கெட்டர். 140 கிமீ வேகத்திற்கு மேல் பந்துவீசுகிறார். விக்கெட்டுகளை வீழ்த்துவது மட்டுமல்லாது, டெத் ஓவரில் ரன்களை கட்டுப்படுத்தக்கூடிய பவுலரும் கூட. பேட்டிங்கிலும் அவர் ஃபினிஷர் மட்டுமல்லாது, மிகப்பெரிய பவர் ஹிட்டரும் கூட. ஹர்திக் பாண்டியாவிடம் அனைத்து திறமைகளும் உள்ளன. கடந்த ஐபிஎல்லில் அவரது அணிக்கு டைட்டில் வென்று கொடுத்தார். டி20 உலக கோப்பையை தனி ஒருவனாக இந்திய அணிக்கு வென்று கொடுக்கவல்ல மேட்ச் வின்னர் ஹர்திக் பாண்டியா என்று ஷேன் வாட்சன் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதையும் படிங்க - ரிஷப் பண்ட்டின் தலையெழுத்து ஹர்திக் பாண்டியாவின் கையில்..! பெரும் குழப்பத்துக்கு கவாஸ்கர் சொல்லும் தீர்வு

இந்திய அணியின் முழுநேர பவுலர்களே 140 கிமீ வேகத்திற்கு மேல் வீச திணறும் நிலையில், ஆல்ரவுண்டரான பாண்டியா 140 கிமீ வேகத்திற்கு மேல் பந்துவீசுவார். பேட்டிங்கிலும் டி20 கிரிக்கெட்டில் அவரது ஸ்டிரைக் ரேட் 151 ஆகும். எனவே அதிரடியான பேட்டிங், அபாரமான பவுலிங், அருமையான ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் பங்களிப்பு செய்யக்கூடிய மேட்ச் வின்னர் தான் ஹர்திக் பாண்டியா என்பதில் சந்தேகமில்லை. அவரை ஷேன் வாட்சன் புகழ்ந்ததிலும் ஆச்சரியமில்லை.
 

click me!