இது தோல்வியை விட கொடுமையானது..! சின்ன தவறால் ICC WTC புள்ளி பட்டியலில் பாகிஸ்தானை விட கீழிறங்கிய இந்தியா

By karthikeyan VFirst Published Jul 5, 2022, 10:17 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் இந்திய அணியின் புள்ளிகள் குறைக்கப்பட்டது. அதன்விளைவாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் அணியை விட பின் தங்கிவிட்டது இந்தியா.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-2 என இந்த டெஸ்ட் தொடரை சமன் செய்தது.

இந்த போட்டி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டி என்பதால் இந்த போட்டியின் முடிவு புள்ளி பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் இரு அணிகளும் வெற்றிக்காக போராடின. கடைசியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலிய அணி தான் தொடர்ச்சியாக முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.  77.78 சதவிகிதத்துடன் ஆஸ்திரேலிய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

இதையும் படிங்க - ENG vs IND: படுமட்டமான, கோழைத்தனமான பேட்டிங்..! இந்திய அணியை கடுமையாக விளாசிய முன்னாள் கோச் ரவி சாஸ்திரி

தென்னாப்பிரிக்க அணி 71.43 வெற்றி சதவிகிதத்துடன் 2ம் இடத்தில் உள்ளது. 58.33 சதவிகிதத்துடன் 3ம் இடத்தில் இருந்துவந்த இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் அடைந்த தோல்விக்கு பிறகும் 3ம் இடத்தில்தான் இருந்தது. ஆனால் வெற்றி சதவிகிதம் 58.33லிருந்து 53.47 ஆக குறைந்திருந்தது.

ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணியின் 2 புள்ளிகள் பறிக்கப்பட்டன. அதனால் 77 புள்ளிகளிலிருந்து 75 புள்ளிகளாக குறைந்தது. அதன்விளைவாக சதவிகிதமும் 53.47லிருந்து 52.08 ஆக குறைந்தது.

இதையும் படிங்க - டெஸ்ட் கிரிக்கெட்டில் லெஜண்ட்களான கவாஸ்கர், பாண்டிங் சாதனைகளை தகர்த்து புதிய வரலாறு படைத்த ஜோ ரூட்

அதனால், 52.38 சதவிகிதத்துடன் நான்காமிடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி தற்போது 3ம் இடத்திற்கு முன்னேறியது. 52.08 சதவிகிதத்துடன் 4ம் இடத்திற்கு பின் தங்கிவிட்டது.
 

click me!