TNPL 2022: சஞ்சய் யாதவ் காட்டடி அரைசதம்.! மதுரை பாந்தர்ஸுக்கு கடின இலக்கை நிர்ணயித்த நெல்லை ராயல் கிங்ஸ்

By karthikeyan VFirst Published Jul 5, 2022, 9:13 PM IST
Highlights

மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி 20 ஓவரில் 209 ரன்களை குவித்து, 210 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை மதுரை பாந்தர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

தமிழ்நாடு சூப்பர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

நெல்லை ராயல் கிங்ஸ் அணி:

ஸ்ரீ நிரஞ்சன், பிரதோஷ் பால், பாபா அபரஜித், சஞ்சய் யாதவ், பாபா இந்திரஜித் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜி அஜிதேஷ், ஜிதேந்திர குமார், ஷாஜகான், என்.எஸ்.ஹரிஷ், அதிசயராஜ் டேவிட்சன், ஈஸ்வரன்.

இதையும் படிங்க - ENG vs IND: படுமட்டமான, கோழைத்தனமான பேட்டிங்..! இந்திய அணியை கடுமையாக விளாசிய முன்னாள் கோச் ரவி சாஸ்திரி

மதுரை பாந்தர்ஸ் அணி:

வி ஆதித்யா, அருண் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), பால்சந்தர் அனிருத், என்.எஸ்.சதுர்வேத் (கேப்டன்), ஜெகதீசன் கௌசிக், தலைவன் சற்குணம், சன்னி சந்து, வருண் சக்கரவர்த்தி, கிரண் ஆகாஷ், சிலம்பரசன், ஆர் மிதுன்.

முதலில் பேட்டிங் ஆடிய நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் நிரஞ்சன் அதிரடியாக பேட்டிங் ஆடி 27 பந்தில் 47 ரன்களை விளாசினார். பாபா அபரஜித் 27 பந்தில் 34 ரன்கள் அடித்தார். 4ம் வரிசையில் இறங்கிய சஞ்சய் யாதவ் நிதானமாக தொடங்கினார். ஆனால் களத்தில் சற்று நிலைத்தபின்னர், அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அரைசதம் அடித்தார்.

இதையும் படிங்க - டெஸ்ட் கிரிக்கெட்டில் லெஜண்ட்களான கவாஸ்கர், பாண்டிங் சாதனைகளை தகர்த்து புதிய வரலாறு படைத்த ஜோ ரூட்

அவருடன் இணைந்து கேப்டன் பாபா அபரஜித்தும் அதிரடியாக ஆடினார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த சஞ்சய் யாதவ் 42 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 70 ரன்களை குவித்தார். இந்திரஜித் 18 பந்தில் 34 ரன்களை விளாச, 20 ஓவரில் 209 ரன்களை குவித்த நெல்லை ராயல் கிங்ஸ் அணி, 210 ரன்கள் என்ற கடின இலக்கை மதுரை பாந்தர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!