Pakistan vs India Super Fours 3rd Match: பாகிஸ்தானுக்கு எதிராக ஆசிய கோப்பையில் இந்தியா சாதனை வெற்றி!

By Rsiva kumar  |  First Published Sep 11, 2023, 11:56 PM IST

பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அதிகபட்சமாக 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.


இந்தியா மாற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சுப்பர் 4 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. ஆனால், இந்திய அணி விளையாடிக் கொண்டிருந்த போது மழை குறுக்கிட்ட நிலையில், போட்டியானது ரிசர்வ் டே என்று சொல்லப்படும் இன்று மாற்றப்பட்டது. இதையடுத்து இன்று பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்க இருந்தது. ஆனால், போட்டியானது மழையின் காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டது.

PAK vs IND: நாங்க தான் கெத்துன்னு ஆட்டம் போட்ட பாகிஸ்தான்; குல்தீப் சுழலில் மொத்தமா சரண்டர்: இந்திய வெற்றி!

Tap to resize

Latest Videos

பின்னர், ஆடிய விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் சதம் அடித்தனர். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்தது. இதில், விராட் கோலி 122 ரன்னுடனும், கேஎல் ராகுல் 111 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பின்னர் கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். இமாம் உல் ஹாக் 9 ரன்னில் பும்ரா பந்தில் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஹர்திக் பாண்டியா பந்தில் கிளீன் போல்டானார். பின்னர் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் களமிறங்கினார். அவரும் வந்த வேகத்தில் ஷர்துல் தாக்கூர் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இதையடுத்து அகா சல்மான் களமிறங்கினார். ஆனால், அதற்குள்ளாக மற்றொரு தொடக்க வீரர் ஃபஹர் ஜமான் 27 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் கிளீன் போல்டானார்.

PAK vs IND:ஜடேஜா பந்தில் முகத்தில் அடி வாங்கிய அகா சல்மான்: ரத்தம் வந்ததைப் பார்த்து பாக், வீரர்கள் அதிர்ச்சி!

இவரைத் தொடர்ந்து இப்திகார் அகமது களமிறங்கினார். ஆனால், அதற்குள்ளாக அகா சல்மான் ஆட்டமிழந்தார். இவர், ரவீந்திர ஜடேஜா பந்தில் ஸ்வீப் அடிக்க முயற்சித்து முகத்தில் ரத்த காயமடைந்த நிலையில், குல்தீப் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு வந்த ஷதாப் கானும் குல்தீப் பந்தில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 27.4 ஓவர்களில் 110 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது. ஆனால், அடுத்து 9 ரன்களுக்குள் இஃப்திகார் அகமது 23 ரன்களில் குல்தீப் யாதவ் ஓவரில் அவரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடையாக ஹரிஷ் ராஃப் மற்றும் நசீம் ஷா பேட்டிங் ஆட வராத நிலையில், பாகிஸ்தான் 32 ஓவர்களில் 10 விக்கெட் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்த தொடரில் முதல் முறையாக பாகிஸ்தான் தோல்வியை தழுவியுள்ளது.

இருண்ட இரவு கூட முடிந்து சூரியன் உதிக்கும்; நீங்கள் தான் எல்லாம் – ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்த அதியா ஷெட்டி!

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்திய அணி அதிகபட்சமாக 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 8 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.  ஜஸ்ப்ரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா படைத்த சாதனைகள்:

ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி அதிகபட்சமாக 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக, ஹாங்காங்கிற்கு எதிராக 256, பெர்முடாவிற்கு எதிராக 257 மற்றும் இலங்கை அணிக்கு எதிராக 317 ரன்களில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

ஒரு நாள் போட்டியில் அதிகபட்ச ரன்களில் பாகிஸ்தான் தோல்வி:

234 ரன்கள் – இலங்கை

228 ரன்கள் – இந்தியா

224 ரன்கள் – ஆஸ்திரேலியா

198 ரன்கள் – இங்கிலாந்து

India vs Pakistan: வேலையை காட்டிய மழை; என்ன சோனமுத்தா போச்சா…. இப்போ மழையா? யாருக்கு சாதகம்?

ஆசிய கோப்பை ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி:

256 ரன்கள் – இந்தியா – ஹாங்காங், கராச்சி, 2008

238 ரன்கள் – பாகிஸ்தான் – நேபாள், முல்தான், 2023

233 ரன்கள் – பாகிஸ்தான் – வங்கதேசம், டாக்கா, 2000

228 ரன்கள் – இந்தியா – பாகிஸ்தான், கொழும்பு 2023

ஒருநாள் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக குறைந்தபட்ச ரன்கள் எடுத்த பாகிஸ்தான்:

87 ரன்கள் – ஷார்ஜா – 1985

116 ரன்கள் – டொரொண்டோ, 1997

128 ரன்கள் – கொழும்பு, 2023

134 ரன்கள் – ஷார்ஜா, 1984

ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி:

228 ரன்கள் – கொழும்பு, 2023

140 ரன்கள் – மிர்புர், 2008

124 ரன்கள் – பிர்மிங்காம், 2017

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய சுழற்பந்து வீச்சாளரின் சிறந்த பவுலிங்:

5/21, அர்ஷாத் ஆயூப், டாக்கா, 1988

5/50, சச்சின் டெண்டுல்கர், கராச்சி, 2005

5/25, குல்தீப் யாதவ், கொழும்பு, 2023

4/12, அனில் கும்ப்ளே, டொரொண்டோ, 1996

click me!