7ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு – பரிதாபமாக நடையை கட்டிய சௌராஷ்டிரா!

By Rsiva kumar  |  First Published Feb 26, 2024, 12:45 PM IST

ரஞ்சி டிராபி தொடரில் தமிழ்நாடுஅணியானது 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.


கடந்த ஜனவரி 5ஆம் தேதி முதல் இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரானது ரஞ்சி டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இதில், புதுச்சேரி, ஜார்க்கண்ட், மணிப்பூர், ஹரியானா, ராஜஸ்தான், ஜம்மு அண்ட் காஷ்மீர், இமாச்சல பிரதேசம், விதர்பா, பரோடா, ஒரிசா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, கோவா, ஆந்திரா என்று அந்தந்த மாநில அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.

இதில், விதர்பா, கர்நாடகா, மும்பை, பரோடா, சௌராஷ்டிரா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ஆந்திரா ஆகிய அணிகள் கால் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இதையடுத்து நடந்த முதல் மற்றும் 2ஆவது காலிறுதிப் போட்டிகளில் முறையே விதர்மா மற்றும் கர்நாடகா அணிகளும், மும்பை மற்றும் பரோடா அணிகளும் விளையாடி வருகின்றன.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் தான் நேற்று முடிந்த 3 ஆவது காலிறுதிப் போட்டியில் சௌராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சௌராஷ்டிரா அணியானது முதல் இன்னிங்ஸீல் 183 ரன்கள் எடுத்தது. தமிழ்நாடு அணியானது 338 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 80 ரன்களும், பூபதி குமார் 65 ரன்களும், சாய் கிஷோர் 60 ரன்களும் எடுத்தனர்.

பின்னர், சௌராஷ்டிரா 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது. இதில் சாய் கிஷோரின் அபார பந்து வீச்சால் சௌராஷ்டிரா 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலமாக தமிழ்நாடு அணியானது இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதுமட்டுமின்றி 7 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி டிராபி தொடரில் தமிழ்நாடு அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரையில் அரையிறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது.

click me!