MI vs GG:அமெலியா கெர் சுழலில் சிக்கி தவித்த குஜராத் ஜெயிண்ட்ஸ் – கடைசி வரை விளையாடி 126 ரன்கள் எடுத்து ஆறுதல்!

By Rsiva kumar  |  First Published Feb 25, 2024, 9:36 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3 ஆவது லீக் போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.


மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி குஜராத் ஜெயிண்ட்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.

இதில், கேப்டன், பெத் மூனி மற்றும் அறிமுக வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். இதில், வேதா ரன் ஏதும் எடுக்காமல் அறிமுக போட்டியில் ஏமாற்றம் அடைந்தார். அடுத்து வந்த ஹர்லீன் தியோல் 8 ரன்னிலும், ஃபோப் லிட்ச்பீல்டு 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தயாளன் ஹேமலதா 3 ரன்களில் நடையை கட்டினார்.

Tap to resize

Latest Videos

நிதானமாக விளையாடிய கேப்டன் பெத் மூனி 24 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஆஷ்லே கார்ட்னர் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அமெலியா கெர் பந்தில் ஆட்டமிழந்தார். இதே போன்று சினே ராணா ரன் ஏதும் எடுக்காமலும் கெர் பந்தில் கிளீன் போல்டானார். கடைசில வந்த தனுஜா கன்வர் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியாக கேத்ரின் பிரைஸ் மட்டுமே 24 ரன்கள் எடுக்கவே 20 ஓவர்களில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியானது 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 126 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

பவுலிங்கைப் பொறுத்த வரையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அமெலியா கெர் 4 விக்கெட்டும், சப்னிம் இஸ்மாயில் 3 விக்கெட்டும், நாட் ஷிவர் பிரண்ட் மற்றும் ஹேலி மேத்யூஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி வருகிறது.

click me!