அறிமுகமாகும் வேதா கிருஷ்ணமூர்த்தி – உற்சாகத்தோடு பவுலிங் தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ் – குஜராத் பேட்டிங்!

By Rsiva kumar  |  First Published Feb 25, 2024, 7:39 PM IST

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.


இந்தியாவில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இதே போன்று நேற்று நடந்த 2ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கடைசி பந்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இதன் மூலமாக இந்த சீசனுக்கான ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி கடந்த சீசன்களை விட அதிக சாதனைகளும் நிகழ்த்தப்படுகிறது.

முதல் முறையாக கடைசி பந்தில் அறிமுக வீராங்கனை சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். 2ஆவது போட்டியில் ஒரு வீராங்கனை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதையடுத்து 3ஆவது போட்டி தற்போது பெங்களூருவில் நடைபெறுகிறது.

Tap to resize

Latest Videos

இதில், குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பவுலிங் தேர்வு செய்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே அணியுடன் இன்றைய போட்டியிலும் களமிறங்குகிறது.

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியைப் பொறுத்த வரையில் வெளிநாட்டு வீராங்கனைகளான ஃபோப் லிட்ச்ஃபீல்டு, லியா தஹூஹூ, கேத்ரின் பிரைஸ் ஆகியோர் அறிமுகமாகின்றனர். இதே போன்று கர்நாடகாவைச் சேர்ந்த இந்திய அணி வீராங்கனையான வேதா கிருஷ்ணமூர்த்தியும் இன்றைய போட்டியில் அறிமுகமாகிறார்.

இதற்கு முன்னதாக இரு அணிகளும் 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2 போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், அதிகபட்சமாக குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 233 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 218 ரன்கள் எடுத்துள்ளது. ஏற்கனவே இந்த 2ஆவது சீசனில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ்

ஹீலி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), நாட் ஷிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), அமெலியா கேர், பூஜா வஸ்த்ரேகர், அமன் ஜோத் கவுர், சஜீவன் சஜனா, சப்னிம் இஸ்மாயில், கீர்த்தனா பாலகிருஷ்ணன், சைகா இஷ்க்.

குஜராத் ஜெயிண்ட்ஸ்

பெத் மூனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), வேதா கிருஷ்ணமூர்த்தி, ஃபோப் லிட்ச்பீல்டு, ஹர்லீன் தியோல், அஷ்லெக் கார்ட்னர், தயாளன் ஹேமலதா, சினே ராணா, தனுஜா கன்வர், கேத்ரின் பிரைஸ், லியா தஹூஹூ, மேக்னா சிங்.

click me!