ரஞ்சி டிராபி: எவ்வளவோ போராடியும் முடியல.. தமிழ்நாடு - டெல்லி போட்டி டிரா

By karthikeyan VFirst Published Dec 30, 2022, 7:56 PM IST
Highlights

ரஞ்சி தொடரில் தமிழ்நாடு - டெல்லி இடையேயான போட்டி டிராவில் முடிந்தது.
 

ரஞ்சி தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தமிழ்நாடு  - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

தமிழ்நாடு அணி:

சாய் சுதர்சன், நாராயண் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), பாபா அபரஜித், பாபா இந்திரஜித் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர், பிரதோஷ் பால், சாய் கிஷோர், அஸ்வின் கிறிஸ்ட், லக்‌ஷ்மிநாராயணன் விக்னேஷ், சந்தீப் வாரியர்.

வெறித்தனமா இலக்கை விரட்டிய நியூசிலாந்து..! பாகிஸ்தானுக்கு கைகொடுத்த வெதர்.. முதல் டெஸ்ட் போட்டி டிரா
 
டெல்லி அணி:

துருவ் ஷோரே, அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), யஷ் துல் (கேப்டன்), ஹிம்மத் சிங், வைபவ் ராவல், ஜாண்டி சிந்து, லலித் யாதவ், பிரன்ஷு விஜய்ரன், விகாஸ் மிஷ்ரா, ஹர்ஷித் ராணா, குல்திப் யாதவ்.

முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர் துருவ் ஷோரே 67 ரன்களும், ஜாண்டி சிந்து 57 ரன்களும் அடித்தனர். பின்வரிசையில் பிரன்ஷு விஜய்ரன்னும் அரைசதம் அடித்தார். பிரன்ஷு 58 ரன்கள் அடிக்க, லலித் யாதவ் 40  ரன்கள் அடிக்க முதல் இன்னிங்ஸில் டெல்லி அணி 303 ரன்கள் அடித்தது.

அதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய தமிழ்நாடு அணியில் பாபா அபரஜித் (57) மற்றும் பாபா இந்திரஜித்(71) ஆகிய இருவரும் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தனர். விஜய் சங்கர் 52 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் பிரதோஷ் பால் மிகச்சிறப்பாக பேட்டிங்  ஆடி சதமடித்தார். அபாரமாக ஆடி 124 ரன்களை குவித்த பிரதோஷ் பாலின் சிறப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 427 ரன்களை குவித்தது தமிழ்நாடு அணி.

124 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர் துருவ் ஷோரே இந்த இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்து 70 ரன்கள் விளாசினார். சிறப்பாக பேட்டிங்  ஆடிய வைபவ் ராவல் ஒருமுனையில் நிலைத்து ஆட, மறுமுனையில் மற்ற வீரர்கள் அனைவருமே ஆட்டமிழந்ததால், வைபவ் ராவல் 95 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தும் கூட அவரால் சதமடிக்க முடியவில்லை. 2வது இன்னிங்ஸில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

2022ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதுக்கு 4 வீரர்கள் பரிந்துரை! ஒரு இந்திய வீரர் கூட லிஸ்ட்டில் இல்லை

டெல்லி அணி வெறும் 138 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. எனவே தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு 139 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் கடைசி நாள் ஆட்டத்தில் வெறும் 6 ஓவர்கள் மட்டுமே எஞ்சியிருந்ததால் தமிழ்நாடு அணியால் இலக்கை அடிக்க முடியவில்லை. 6 ஓவரில் தமிழ்நாடு அணி 54 ரன்கள் அடிக்க, ஆட்டம் டிராவில் முடிந்தது.
 

click me!