பரோடாவை சொற்ப ரன்களுக்கு பார்சல் கட்டிய தமிழ்நாடு..! முதல் இன்னிங்ஸிலேயே தெரிந்துபோன ரிசல்ட்.. கோப்பை உறுதி

By karthikeyan VFirst Published Jan 31, 2021, 8:57 PM IST
Highlights

சையத் முஷ்டாக் அலி தொடரின் ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய பரோடாவை வெறும் 120 ரன்களுக்கு சுருட்டியது தமிழ்நாடு அணி.
 

உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரின் ஃபைனல் அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது. தமிழ்நாடு மற்றும் பரோடா அணிகள் மோதும் ஃபைனலில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

பரோடா அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தனர். அதனால் ரன் வேகமும் மந்தமாகவே இருந்தது. தொடக்க வீரர் தேவ்தர் 16 ரன்னிலும், ராத்வா, ஸ்மித் படேல் ஆகிய இருவரும் ஒரு ரன்னிலும், பானு பனியா ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழக்க, அபிமன்யூ ராஜ்பூத் 2 ரன்னிலும், கார்த்திக் ககடே 4 ரன்னிலும் தமிழ்நாடு ஸ்பின்னர் மணிமாறன் சித்தார்த் சுழலில் ஆட்டமிழந்தனர்.

விஷ்ணு சோலங்கி மட்டுமே ஓரளவிற்கு நன்றாக ஆடி அதிகபட்சமாக 49 ரன்கள் அடித்தார். பின்வரிசை வீரரான ஷேத் 29 ரன்கள் அடித்தார். பரோடா அணி வீரர்கள் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக ஆட்டமிழந்ததால் அந்த அணி 20 ஓவரில் வெறும் 120 ரன்கள் மட்டுமே அடித்தது. தமிழ்நாடு அணியில் மணிமாறன் சித்தார்த் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

121 ரன்கள் என்ற எளிய இலக்கை தமிழ்நாடு அணி எளிதாக அடித்துவிடும் என்பதால் சையத் முஷ்டாக் அலி டிராபியை தூக்குவது உறுதியாகிவிட்டது.
 

click me!