டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று 4 போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியல் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நேற்று(22ம் தேதி) தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. க்ரூப் 1-ல் இடம்பெற்றுள்ள 6 அணிகளும் தலா ஒரு போட்டியில் ஆடிவிட்டன.
இதையும் படிங்க - தோற்க வேண்டிய மேட்ச்சை ஜெயித்து கொடுத்த கோலி.. இதுதான் நண்பா உன்னோட பெஸ்ட் இன்னிங்ஸ்! ரோஹித் புகழாரம்
undefined
சிட்னியில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து 2 புள்ளிகளை பெற்றது. மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் நியூசிலாந்து அணியின் நெட் ரன்ரேட் +4.450 ஆகும். அதனால் அதிக ரன்ரேட்டின் அடிப்படையில் நியூசிலாந்து அணி க்ரூப் 1-ல் முதலிடம் வகிக்கிறது.
க்ரூப் 1-ல் அயர்லாந்தை வீழ்த்திய இலங்கை அணி 2ம் இடத்திலும், ஆஃப்கானிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து அணி 3ம் இடத்திலும் உள்ளன.
இதையும் படிங்க - சேஸிங்கில் நான் “கிங்”டா.. மெல்பர்னில் பாகிஸ்தானை பட்டாசாக வெடித்து தீபாவளி கொண்டாடிய கோலி
க்ரூப் 2-ல் ஒரேயொரு போட்டி மட்டுமே நடந்துள்ளது. மெல்பர்னில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி க்ரூப் 2-ல் முதலிடத்தில் உள்ளது.