டி20 உலக கோப்பை: இலங்கையின் கையில் ஆஸ்திரேலியாவின் குடுமி..! புள்ளி பட்டியல் அப்டேட்

டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறுவது முன்னேறாததும் இலங்கையின் கையில் உள்ளது. சூப்பர் 12 சுற்றின் க்ரூப் 1 மற்றும் க்ரூப் 2 புள்ளி பட்டியலை பார்ப்போம்.
 

t20 world cup points table update and australias fate in sri lankas hand

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. சூப்பர் 12 சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 1 மற்றும் க்ரூப் 2லிருந்து தலா 2 அணிகள் வீதம் 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

க்ரூப் 1ல் நியூசிலாந்து அணி 7 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. நியூசிலாந்து அணியின் நெட் ரன்ரேட் +2.113 என்பதால் முதல் அணியாக நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. ஆஃப்கானிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியும் 7 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியல்ல. ஏனெனில் நாளை இங்கிலாந்து - இலங்கை இடையே நடக்கும் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் இங்கிலாந்தும் 7 புள்ளிகளை பெறும். ஆனால் ஆஸ்திரேலியாவை விட இங்கிலாந்து அணியின் நெட் ரன்ரேட் அதிகமாக உள்ளது.

Latest Videos

டி20 உலக கோப்பை: ஆஸ்திரேலியாவிற்கு பயத்தை காட்டிய ரஷீத் கான்.. போராடி வென்ற ஆஸ்திரேலியா..!

எனவே நாளை சிட்னியில் நடக்கும் இங்கிலாந்து - இலங்கை இடையேயான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும். இலங்கை அணி வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறும். எனவே ஆஸ்திரேலிய அணியின் குடுமி இலங்கையிடம் உள்ளது.

க்ரூப் 2ல் இந்திய அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் நிலையில், கடைசி போட்டியில் ஜிம்பாப்வேவை வீழ்த்திவிடும் என்பதால் 8 புள்ளிகளுடன் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும். 5 புள்ளிகளை பெற்றுள்ள தென்னாப்பிரிக்க அணி கடைசி போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்வதால் கண்டிப்பாக தென்னாப்பிரிக்கா ஜெயித்துவிடும். எனவே 7 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்காவும் அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

டி20 உலக கோப்பை: கேன் வில்லியம்சன் அபார பேட்டிங்.. அயர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய நியூசிலாந்து

4 போட்டிகளின் முடிவில் 4 புள்ளிகளை பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, கடைசி போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தினாலும் கூட 6 புள்ளிகளைத்தான் பெறும். ஒருவேளை பாகிஸ்தான் ஜெயித்து, இந்தியா ஜிம்பாப்வேவிடமோ அல்லது தென்னாப்பிரிக்கா நெதர்லாந்திடமோ தோற்றால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது. ஆனால் அது இரண்டுமே நடக்காது. 
 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image