டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை எப்போது வெளியீடு தெரியுமா?

By Rsiva kumar  |  First Published Jan 5, 2024, 1:49 PM IST

வரும் ஜூன் மாதம் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வரும் 8ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.


ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்ந்து வரும் ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை மிக பிரமாண்டமாக தொடங்க இருக்கிறது. அதோடு இந்த டி20 உலகக் கோப்பை போட்டிகள் 10 மைதானங்களில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகள் இந்த டி20 உலகக் கோப்பை தொடரை நடத்துகின்றன. ஆதலால், இந்த இரு அணிகள் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுவிட்டன.

கிழிஞ்சு போன தொப்பிய போட்டு விளையாடிய தென் ஆப்பிரிக்கா கேப்டன்: ஏன் தெரியுமா?

Tap to resize

Latest Videos

இது தவிர, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை என்று 8 அணிகள் முந்தைய டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து தகுதி பெற்றன. மேலும், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகள் தகுதிக்கு முந்தைய அணிகளுக்குப் பிறகு ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் டாப் இடங்களைப் பிடித்துள்ளன.

அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை பிராந்திய தகுதிச் சுற்றுகளில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றதன் மூலம் டி20 உலகக் கோப்பைத் தகுதியைப் பெற்றன. குவாலிஃபையர் போட்டியின் மூலமாக பப்புவா நியூ கினியா அணி டி20 உலகக் கோப்பைக்கான தகுதி பெற்றது. முதல் முறையாக டி20 உலகக் கோப்பைக்கு உகாண்டா தகுதி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது.

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே….சின்ன வயசுல விளையாடிய ரிங்கா ரிங்கா ரோசஸ் - வைரலாகும் வீடியோ!

ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், கனடா, இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, நமீபியா, நேபாள், நெதர்லாந்து, நியூசிலாந்து, ஓமன், பாகிஸ்தான், பப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், உகாண்டா, அமெரிக்கா.

இந்த நிலையில் தான் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வரும் 8 ஆம் தேதி திங்கள் கிழமை வெளியாகும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், இந்த தொடைரில் இடம் பெறும் 20 அணிகளும் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

தென் ஆப்பிரிக்காவில் ஒலித்த ராம் சியா ராம் பாடல்: ஸ்ரீராமரைப் போன்று வில் அம்புகளை இழுத்து போஸ் கொடுத்த கோலி!

குரூப் ஏ:

இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா

குரூப் பி:

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன்

குரூப் சி:

நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பாப்புவா நியூ கினியா,

குரூப் டி:

தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து, நேபாள்

கேப்டவுன் வெற்றி – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் உச்சத்திற்கு சென்ற இந்தியா!

click me!