தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் சுப்மன் கில் போன்று இருவரும் ரிங்கா ரிங்கா ரோசஸ் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் 23 விக்கெட்டுகள் சரிந்தன. டாஸ் வென்று முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதைத் தொடர்ந்து 98 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா 2ஆவது இன்னிங்ஸ் விளையாடியது. முதல் நாளில் தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் எடுத்து விளையாடி வந்தது. அப்போது, பீல்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலி மற்றும் சுப்மன் கில் இருவரும் இணைந்து ரிங்கா ரிங்கா ரோசஸ் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு முன்னதாக தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 15.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்கள் எடுத்திருந்த போது கேசவ் மகாராஜ் களமிறங்கினார். அப்போது, தென் ஆப்பிரிக்கா டிஜே, ராம் சியா ராம் என்ற பக்தி பாடலை ஒலிக்கச் செய்தார். இதனை கேட்ட விராட் கோலி, தனது கைகளை மடக்கி, ராமரின் சின்னமான தோரணையை நினைவுபடுத்தும் வகையில், ஒரு வில் அம்பை இழுத்து, ராமருக்கு ஒரு தனித்துவமான அஞ்சலி செலுத்துவது போன்று போஸ் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டவுன் வெற்றி – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் உச்சத்திற்கு சென்ற இந்தியா!
தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா 2ஆவது இன்னிங்ஸில் 176 ரன்கள் குவித்தது. இதையடுத்து இந்திய அணிக்கு 79 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது.
Virat Kohli and Shubman Gill 😂❤️ pic.twitter.com/Zd4rbSWaE3
— Shubman Gang (@ShubmanGang)