தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்த இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்று சமன் செய்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதுவரையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட கைப்பற்றியது இல்லை. இந்த நிலையில் தான் இந்த முறையும் ஒரு தொடரை கூட கைப்பற்றாத நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது.
சென்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து மோசமான சாதனை படைத்தது. இதையடுத்து இந்த 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்தது. கேப்டவுனில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தது.
பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸை விளையாடி 153 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வரலாற்றில் மோசமான சாதனை படைத்தது. 153 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்தது. இதில், விராட் கோலி 46 ரன்கள் குவித்தார். இதையடுத்து தென் ஆப்பிரிக்கா 98 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது. இதில், எய்டன் மார்க்ரம் மட்டும் நிலையாக நின்று106 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்தியாவிற்கு எதிராக மார்க்ரம் அடித்த முதல் சதம் இதுவாகும்.
SA vs IND 2nd Test, Aiden Markram: கேஎல் ராகுல் விட்ட கேட்ச், சதம் அடித்து சாதனை படைத்த மார்க்ரம்!
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்கா 2ஆவது இன்னிங்ஸில் 176 ரன்கள் குவித்தது. இதையடுத்து 79 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடி காட்டினர். இதில், ஜெய்ஸ்வால் 23 பந்துகளில் 6 பவுண்டரி உள்பட 28 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கில் 10 ரன்களில் ஆட்டமிழக்க, கோலி 12 ரன்களில் நடையை கட்டினார். கடைசியாக வந்த ஷ்ரேயாஸ் ஐயர் வின்னிங் ஷாட்டாக பவுண்டரி அடிக்க இந்திய அணி 12 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலமாக முதல் முறையாக கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக நடந்த 6 போட்டிகளில் 4ல் தோல்வி அடைந்துள்ளது. மேலும், 2 போட்டி டிரா செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி எம்.எஸ்.தோனிக்கு பிறகு டெஸ்ட் தொடரை டிரா செய்த இந்திய அணியின் 2ஆவது கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். மேலும், முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் கேப்டவுனில் வெற்றி பெற்ற முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். மேலும், 2024 ஆம் ஆண்டை இந்திய அணி வெற்றியோடு தொடங்கியுள்ளது.