இந்திய மகளிர் அணி மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு நேவி மும்பையில் நடக்கிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா மகளிர் அணி ஒரே ஒரு டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்து ஒயிட் வாஷ் ஆனது.
இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு நேவி மும்பையில் நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பிறகு இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி இதுவாகும். அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்தது.
கேப்டவுன் வெற்றி – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் உச்சத்திற்கு சென்ற இந்தியா!
பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா மகளிர் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டிராபியை கைப்பற்றியது. இந்த உலகக் கோப்பை தொடரைத் தொடரைத் தொடர்ந்து இரு அணிகளும் முதல் முறையாக டி20 போட்டியில் விளையாடுகின்றன.
இதுவரையில் இரு அணிகளும் 31 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், ஆஸ்திரேலியா 23 முறையும், இந்தியா 7 முறையும் மோதியுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், இந்தப் போட்டியில் இரு அணிகளும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய மகளிர் அணி:
ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரேகர், ஷ்ரேயங்கா பட்டீல், ரேணுகா தாகூர் சிங், மன்னட் காஷ்யப், கனிகா அகுஜா, மின்னு மனி, யாஷ்திகா பாட்டீயா, சைகா இஷாக், டைட்டஸ் சாது.
ஆஸ்திரேலியா மகளிர் அணி:
போப் லிட்ச்பீல்டு, அலீசா ஹீலி (விக்கெட் கீப்பர்/கேப்டன்), எலீசா பெர்ரி, பெத் மூனி, தஹீலா மெக்ராத், அஷ்லேக் கார்ட்னர், அன்னபெல் சுதர்லேண்ட், ஜார்ஜியா வேர்ஹாம், அலானா கிங், கிம் கார்த், மேகன் ஷுட், கிரேஸ் ஹாரிஸ், ஹீதர் கிரஹாம், டேர்ஷி பிரவுன், ஜெஸ் ஜோனாஸென்.