தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் கேப்டன் டீன் எல்கர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய தொப்பியை அணிந்து தான் கடைசி வரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் செஞ்சூரியன் மற்றும் கேப்டவுனில் நடந்தது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவும், 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இதில், முதல் டெஸ்ட் போட்டியில் டெம்பா பவுமா கேப்டனாக இருந்த நிலையில் காயமடைந்த நிலையில் அவருக்கு பதிலாக டீன் எல்கர் கேப்டனாக செயல்பட்டார்.
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே….சின்ன வயசுல விளையாடிய ரிங்கா ரிங்கா ரோசஸ் - வைரலாகும் வீடியோ!
இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் டீன் எல்கர் கேப்டனாக இருந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் அணியில் இடம் பெற்று வந்த டீன் எல்கர் நேற்று நடந்த இந்தியாவிற்கு எதிரான கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். முதல் போட்டியில் 185 ரன்கள் குவித்த டீன் எல்கர் 2ஆவது போட்டியில் 4 மற்றும் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்த நிலையில் தான் அவர் கிழிந்து போன தொப்பியை அணிந்து கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார். இது தான் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுவரையில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய எல்கர், 14 சதங்கள், 23 அரைசதங்கள் உள்பட 5,347 ரன்கள் குவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக 199 ரன்கள் எடுத்துள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அன்று முதல் கேப்டவுனில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டி வரையில் ஒரே ஒரு தொப்பியை மட்டுமே பயன்படுத்தி விளையாடியுள்ளார். இதில், அந்த தொப்பி கிழிந்தும் போயிருந்தது. மற்ற வீரர்கள் எல்லாம் வேறு வேறு தொப்பியை பயன்படுத்தி விளையாடி வரும் சூழலில் டீன் எல்கர் மட்டுமே தனது நாட்டிற்காக தான் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டி முதல் இப்போது வரையில் ஒரே தொப்பியை பயன்படுத்தியிருக்கிறார்.
கேப்டவுன் வெற்றி – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் உச்சத்திற்கு சென்ற இந்தியா!
இது குறித்து டீன் எல்கர் கூறியிருப்பதாவது: உங்களுக்கு உலகக் கோப்பை எவ்வளவு முக்கியமானதோ, அது போன்று தான் எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் முக்கியம். எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் தான் உலகக் கோப்பை. சிறு வயது முதலே நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பது தான் எனது கனவு. அந்த வாய்ப்பை வழங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் அடையாளமாக முதல் டெஸ்ட் போட்டியின் போது வழங்கப்பட்ட தொப்பியை பாதுகாப்பாக வைத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.