ஐசிசி டி20 கிரிக்கெட் வீரருக்கான விருது வென்ற முதல் இந்தியர் - சூர்யகுமார் யாதவ்!

By Rsiva kumarFirst Published Jan 25, 2023, 10:45 PM IST
Highlights

கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆண்கள் டி20 கிரிக்கெட் வீரருக்கான விருதை சூர்யகுமார் யாதவ் வென்றுள்ளார்.

ஐசிசி ஆண்களுக்கான டி20 பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 908 ரேட்டிங் பெற்று நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளார். 2ஆவது இடத்தில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் உள்ளார். ஆண்டுதோறும் டி20, டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட் என்று அனைத்து ஃபார்மேட்களிலும் சிறப்பாக ஆடிய வீரர்களுக்கு ஐசிசி விருது வழங்கி வருகிறது. அந்த வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு சிறப்பான தனது ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ்விற்கு ஐசிசி ஆண்கள் டி20 கிரிக்கெட் வீரருக்கான விருதை வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி டி20 கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருது வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார்.

மகளிர் பிரீமியர் லீக் என்று பெயர் மாற்றப்பட்ட மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்!

கிட்டத்தட்ட 31 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் 1164 ரன்கள் எடுத்துள்ளார். இதில், கடந்த ஆண்டில் மட்டும் மொத்தமாக 68 சிக்சர்கள் விளாசியுள்ளார். இவ்வளவு ஏன், 2 சதங்கள் மற்றும் 9 அரை சதங்கள் வரையில் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 6 போட்டிகளில் 3 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 189.68 என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றில் முக்கியமான நாள்: ரூ.4669.99 கோடியை அள்ளிக் கொடுத்த மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 55 பந்துகளில் 117 ரன்கள் குவித்துள்ளார். இது அவரது முதல் டி20 போட்டி சதம் ஆகும். ஐசிசி ஆண்களுக்கான ஒரு நாள் போட்டி பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் 6ஆவது இடத்தில் இருந்த விராட் கோலி தற்போது 7ஆவது இடத்திற்கு பின் தங்கியுள்ளார். ஆனால், தரவரிசைப் பட்டியலில் 8ஆவது இடத்திலிருந்த சுப்மன் கில் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதன் மூலமாக 6ஆவது இடம் பிடித்துள்ளார். ரோகித் சர்மா 9ஆவது இடத்தில் இருக்கிறார்.

வேக வேகமாக முன்னேறும் சிராஜ்: ஐசிசி ஒரு நாள் போட்டி பௌர்லர்கள் தரவரிசைப் பட்டியலில் நம்பர் 1 இடம்!

இதே போன்று ஐசிசி ஆண்களுக்கான ஒரு நாள் போட்டி பௌலர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் நம்பர் 1 இடம் பிடித்துள்ளார். இவ்வளவு ஏன், இந்திய அணி தான் ஐசிசி ஆண்களுக்கான ஒரு நாள் கிரிக்கெட் அணிக்கான நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக நியூசிலாந்து நம்பர் 1 இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!