கணுக்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட சூர்யகுமார் யாதவ் தனது பயிற்சியை தொடங்கியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவிற்கு டி20 போட்டியின் போது கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் இந்திய அணியிலிருந்து வெளியேறி லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால், அவர் குடல் இறக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கும் சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார்.
இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் முதல் சில போட்டிகளை தவறவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டி20 உலகக் கோப்பை தொடரிலும் விளையாடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் கணுக்கால் அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்று அறுவை சிகிச்சையை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய சூர்யகுமார் யாதவ், தனது பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.
ஜிம்பாப்வேயை வச்சு செஞ்ச வணிந்து ஹசரங்கா – அசால்டா 7 விக்கெட் எடுத்து சாதனை!
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: பேபி ஸ்டெப்ஸ் என்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் கால்களை மெல்ல மெல்ல எடுத்து வைத்து பயிற்சி செய்யும் காட்சி இடம் பெற்றுள்ளது. எனினும், முழுமையாக குணமடைய இன்னும் சற்று காலம் ஆகும் என்று கூறப்படுகிறது.
ஹெலிகாப்டரில் பறந்து வந்து மைதானத்தில் தரையிறங்கிய டேவிட் வார்னர் – வைரலாகும் வீடியோ!
Good News For all SKY Fans 🥹❤️
SKY has started batting in nets.
Can't wait to see him on field 😭 pic.twitter.com/GP2B7WJ49S