பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடந்தது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஷாகீன் அஃப்ரிடி பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் டெவோன் கான்வே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
ஜிம்பாப்வேயை வச்சு செஞ்ச வணிந்து ஹசரங்கா – அசால்டா 7 விக்கெட் எடுத்து சாதனை!
அதன் பிறகு ஃபின் ஆலன் உடன் இணைந்த கேப்டன் கேன் வில்லியம்சன் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். ஆலன் 15 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து டேரில் மிட்செல் களமிறங்கினார். வில்லியம்சன் மற்றும் மிட்செல் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தனர்.
ஹெலிகாப்டரில் பறந்து வந்து மைதானத்தில் தரையிறங்கிய டேவிட் வார்னர் – வைரலாகும் வீடியோ!
வில்லியம்சன் 42 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து டேரில் மிட்செல் 27 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது நியூசிலாந்து அணி 16.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்திருந்தது. கடைசியாக வந்த மார்க் சேப்மேன் மற்றும் ஆடம் மில்னே ஓரளவு கை கொடுக்க நியூசிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் குவித்தது.
டிராவிட்டின் அறிவுறைகளை பின்பற்ற மறுக்கும் இஷான் கிஷான் – ரஞ்சி டிராபியில் விளையாடலயா?
பவுலிங்கைப் பொறுத்த வரையில் பாகிஸ்தான் அணியில் ஷாகீன் அஃப்ரிடி 3 விக்கெட்டும், ஹரீஷ் ராஃப் 2 விக்கெட்டும், அப்பாஸ் அஃப்ரிடி 3 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் சைம் அயூப் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி நல்ல தொடக்கம் கொடுத்தனர். அயூப் 27 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்து பாபர் அசாம் களமிறங்க, ரிஸ்வான் 25 ரன்களில் டிம் சவுதி பந்தில் ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து ஃபகர் ஜமான் 15 ரன்களில் ஆட்டமிழக்க இப்திகார் அகமது 24 ரன்களில் வெளியேறினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே கடைசி வரை போராடிய பாபர் அசாம் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக பாகிஸ்தான் 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்கள் மட்டுமே எடுத்து 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றதன் மூலமாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. 2ஆவது டி20 போட்டி வரும் 14ஆம் தேதி தொடங்குகிறது.