ஜிம்பாப்வேயை வச்சு செஞ்ச வணிந்து ஹசரங்கா – அசால்டா 7 விக்கெட் எடுத்து சாதனை!

Published : Jan 12, 2024, 03:12 PM IST
ஜிம்பாப்வேயை வச்சு செஞ்ச வணிந்து ஹசரங்கா – அசால்டா 7 விக்கெட் எடுத்து சாதனை!

சுருக்கம்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் வணிந்து ஹசரங்கா 7 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜிம்பாப்வே அணியானது 3 ஒருநாள் போட்டிகள் தொடர் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்தது. இதில் முதல் போட்டியானது மழையால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நடந்த 2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹெலிகாப்டரில் பறந்து வந்து மைதானத்தில் தரையிறங்கிய டேவிட் வார்னர் – வைரலாகும் வீடியோ!

கடைசியாக நேற்று இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் மழை பெய்த நிலையில் போட்டியானது 27 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 22.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ஜாய்லார்ட் கும்பி 29 ரன்கள் எடுத்தார்.

டிராவிட்டின் அறிவுறைகளை பின்பற்ற மறுக்கும் இஷான் கிஷான் – ரஞ்சி டிராபியில் விளையாடலயா?

முதல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து 44 ரன்கள் எடுத்திருந்த ஜிம்பாப்வே அடுத்து ஹசரங்காவின் ஒரே ஓவரில் மட்டும் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பிறகு மழை பெய்யவே போடியானது 27 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அடுத்தடுத்து ஹசரங்கா விக்கெட்டுகள் எடுக்க ஜிம்பாப்வே 96 ரன்கள் மட்டும் எடுத்தது. சுழற்பந்து வீச்சாளரான வணிந்து ஹசரங்கா 5.5 ஓவர்களில் ஒரு மெய்டன் உள்பட 19 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

ஒரு விக்கெட், 60 ரன்கள் (நாட் அவுட்) – ரோகித் சர்மாவே பாராட்டிட்டாரு, இனி ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பு தான்!

பின்னர், எளிய இலக்கை துரத்திய இலங்கை அணியில் கேப்டன் குசால் மெண்டிஸ் 66 ரன்களும், சதீரா சமரவிக்ரமா 14 ரன்களும் எடுக்க இலங்கை 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியது. இந்தப் போட்டியில் வணிந்து ஹசரங்கா ஆட்டநாயகன் விருது வென்றார். இதைத் தொடர்ந்து வரும் 14 ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Rohit Sharma: டி20 கிரிக்கெட்டில் 100 வெற்றி – முதல் வீரராக ரோகித் சர்மா வரலாற்று சாதனை!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

ப்பா.. என்னா அடி.. சர்ஃபராஸ் கானை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்கணும்.. ஜாம்பவான் சப்போர்ட்!
டி20 உலகக் கோப்பையில் பெரிய அணிகளை பந்தாட ஆப்கானிஸ்தான் ரெடி.. ஸ்டிராங் டீம்.. அட! கேப்டன் இவரா?