IND vs SA: அதிரடி அரைசதம் அடித்து தனி ஒருவனாக இந்தியாவை காப்பாற்றிய சூர்யகுமார் யாதவ்..! SA-க்கு சவாலான இலக்கு

By karthikeyan V  |  First Published Oct 30, 2022, 6:20 PM IST

டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 49 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, சூர்யகுமார் யாதவின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில்  133 ரன்கள் அடித்து 134 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்துள்ளது.
 


டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 2ல் மிகச்சிறப்பாக ஆடிவரும் மற்றும் சமபலம் வாய்ந்த அணிகளான இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று ஆடிவருகின்றன. பெர்த்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 2 அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டது. இந்திய அணியில் அக்ஸர் படேலுக்கு பதிலாக தீபக் ஹூடா சேர்க்கப்பட்டார். தென்னாப்பிரிக்க அணியில் ஷம்ஸிக்கு பதிலாக லுங்கி இங்கிடி சேர்க்கப்பட்டார்.

Tap to resize

Latest Videos

undefined

கடைசி பந்தில் வங்கதேச விக்கெட் கீப்பர் செய்த தவறால் நோ-பால் கொடுத்த அம்பயர்..!

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

 தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரைலீ ரூசோ, எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வைன் பார்னெல், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, அன்ரிக் நோர்க்யா.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் (15) மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரையும் ஒரே ஓவரில்(5வது ஓவரில்) வீழ்த்திய லுங்கி இங்கிடி, தனது அடுத்தடுத்த ஓவர்களில் கோலி (12) மற்றும் ஹர்திக் பாண்டியா(2) ஆகிய இருவரையும் வீழ்த்தினார். தீபக் ஹூடாவை 2 ரன்னில் நோர்க்யா வீழ்த்த, இந்திய அணி 49 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

அதன்பின்னர் சூர்யகுமார் யாதவ் அடித்து ஆட, மந்தமாக ஆடிய தினேஷ் கார்த்திக் 15 பந்தில் 6 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் சூர்யகுமாருடன் 7 ஓவர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் தினேஷ் கார்த்திக். அடித்து ஆடி 30 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ், 40 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் அடித்து 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். 

நெதர்லாந்தை வீழ்த்தி டி20 உலக கோப்பையில் ஒருவழியா முதல் வெற்றியை பெற்ற பாகிஸ்தான்

சூர்யகுமாரின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 133 ரன்கள் அடித்து, 134 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி. இது பெர்த் ஆடுகளத்தில் கண்டிப்பாகவே சவாலான இலக்குதான். இதே பெர்த்தில் தான், ஜிம்பாப்வேவுக்கு எதிராக 131 ரன்கள் என்ற இலக்கை அடிக்க முடியாமல் பாகிஸ்தான் தோற்றது. நெதர்லாந்துக்கு எதிராகவும் 92 ரன்கள் என்ற இலக்கை 14வது ஓவரில் தான் அடித்து பாகிஸ்தான் ஜெயித்தது. அதுவும் 4 விக்கெட்டுகளை இழந்துதான் அடித்தது. எனவே பெர்த்தில் 134 ரன்கள் என்பது சவாலான இலக்கே. இந்திய அணி ஆரம்பத்தில் ஒருசில விக்கெட்டுகளை வீழ்த்தினால் ஜெயிக்கக்கூட வாய்ப்புள்ளது.
 

click me!