IND vs SA: ரோஹித், ராகுல், கோலி, பாண்டியாவை வீழ்த்திய இங்கிடி..! சீட்டுக்கட்டாய் சரிந்த இந்திய பேட்டிங் ஆர்டர்

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் ஆடிவரும் நிலையில், முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தினார் லுங்கி இங்கிடி. மேலும் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியாவையும் இங்கிடி வீழ்த்த, இந்திய அணி 49 ரன்களுக்கு5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
 

india batting order surrendering to lungi ngidi in india vs south africa match in t20 world cup

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 2ல் மிகச்சிறப்பாக ஆடிவரும் மற்றும் சமபலம் வாய்ந்த அணிகளான இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று ஆடிவருகின்றன. பெர்த்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 2 அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டது. இந்திய அணியில் அக்ஸர் படேலுக்கு பதிலாக தீபக் ஹூடா சேர்க்கப்பட்டார். தென்னாப்பிரிக்க அணியில் ஷம்ஸிக்கு பதிலாக லுங்கி இங்கிடி சேர்க்கப்பட்டார்.

Latest Videos

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

 தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரைலீ ரூசோ, எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வைன் பார்னெல், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, அன்ரிக் நோர்க்யா.

முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் மற்றும் ராகுல் இருவரும் நிதானமாக தொடங்கினர். ராகுல் முதல் ஓவர் முழுக்க ஆடி ஒரு ரன் கூட அடிக்கவில்லை. முதல் ஓவர் மெய்டன் ஓவர் ஆனது. 2வது ஓவரில் ரோஹித் அபாரமாக ஒரு சிக்ஸர் அடிக்க, 3வது ஓவரில் ராகுலும் அபாரமாக ஒரு சிக்ஸர் அடித்தார். இருவரும் அடித்த சிக்ஸரை பார்க்கையில், பெரிய இன்னிங்ஸ் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 5வது ஓவரை வீசிய லுங்கி இங்கிடி, அந்த ஓவரின் 2வது பந்தில் ரோஹித் (15) மற்றும் கடைசி பந்தில் ராகுல் (9) என தொடக்க வீரர்கள் இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தினார். தனது அடுத்த ஓவரும் இன்னிங்ஸின் 7வது ஓவரில் விராட் கோலியையும் (12) இங்கிடி வீழ்த்தினார். அடுத்த ஓவரிலேயே தீபக் ஹுடாவை நோர்க்யா டக் அவுட்டாக்கி அனுப்ப, ஹர்திக் பாண்டியாவை 2 ரன்னில் இங்கிடி வீழ்த்த, இந்திய அணி வெறும் 49 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறுகிறது.
 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image