2 மாதம் கழித்து மனைவியை பார்த்த மகிழ்ச்சியில் மனைவியுடன் செம டான்ஸ் ஆடிய சூர்யகுமார் யாதவ்..! வீடியோ

Published : Aug 20, 2021, 09:20 PM IST
2 மாதம் கழித்து மனைவியை பார்த்த மகிழ்ச்சியில் மனைவியுடன் செம டான்ஸ் ஆடிய சூர்யகுமார் யாதவ்..! வீடியோ

சுருக்கம்

65 நாட்களுக்கு பிறகு தனது மனைவியை பார்த்த மகிழ்ச்சியில் அவருடன் இணைந்து நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.  

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், இலங்கை சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இடம்பெற்று இலங்கை சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடினார். 

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றிருந்த ஷுப்மன் கில், மயன்க் அகர்வால் ஆகிய வீரர்கள் காயமடைந்ததன் விளைவாக, அவர்களுக்கு மாற்று வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டதையடுத்து, இலங்கையிலிருந்து நேரடியாக இங்கிலாந்து சென்றார் சூர்யகுமார் யாதவ்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றுள்ள வீரர்கள், அவர்கள் குடும்பத்தினரை அழைத்துச்செல்ல அனுமதியளிக்கப்பட்டது. எனவே சூர்யகுமார் யாதவின் மனைவி தேவிஷா ஷெட்டியும் இங்கிலாந்து சென்றார். லண்டனில் குவாரண்டினை முடித்த அவரை சந்தித்தார் சூர்யகுமார் யாதவ். இலங்கைக்கு கிளம்புவதற்கு முன் மனைவியை சந்தித்த சூர்யகுமார் யாதவ், 65 நாட்களுக்கு பிறகு மனைவியை சந்தித்த மகிழ்ச்சியில் அவருடன் நடனம் ஆடி மகிழ்ந்தார்.

அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்தார். அந்த வீடியொ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
 

PREV
click me!

Recommended Stories

அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!
சஞ்சு சாம்சன் ஆவேசம்.. வலியால் துடித்து அலறிய அம்பயர்.. பதறிய‌ கம்பீர்.. என்ன நடந்தது?