
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
2வது டெஸ்ட்டிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி படுமட்டமாக பேட்டிங்கை தொடங்கியுள்ளது. இன்று இரவு இந்திய நேரப்படி 8.30 மணிக்கு போட்டி தொடங்கியது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அபித் அலியும் இம்ரான் பட்டும் களமிறங்கினர். அபித் அலியை முதல் ஓவரின் 3வது பந்திலேயே வெறும் ஒரு ரன்னில் வெளியேற்றினார் கீமார் ரோச். தனது அடுத்த ஓவரிலேயே அசார் அலியை டக் அவுட்டாக்கினார் ரோச். இன்னிங்ஸின் 4வது ஓவரில் இம்ரான் பட்டை ஒரு ரன்னில் அவுட்டாக்கினார் ஜெய்டன் சீல்ஸ்.
இதையடுத்து வெறும் 2 ரன்னுக்கே பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ரன்னை விட விக்கெட் அதிகமாக விழுந்துவிட்டது. கேப்டன் பாபர் அசாமும் ஃபவாத் ஆலமும் இணைந்து ஆடிவருகின்றனர்.